3 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்., பெரும் அழுத்தத்தில் உள்ள ஆசிய நாடு
பாகிஸ்தான் 3 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்தியா கட்டாயத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, பாகிஸ்தான் அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தது 30 மில்லியன் (3 கோடி) வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இல்லையெனில், நாட்டில் உள்நாட்டு ஸ்திரமின்மை மற்றும் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.
கராச்சியில் அளித்த பேட்டியில், பங்கா கூறியதாவது:
“பாகிஸ்தானின் இளைஞர்கள் மிக வேகமாக வேலைவாய்ப்பு வயதுக்கு வருகிறார்கள். ஆண்டுதோறும் குறைந்தது 25-30 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு தலைமுறை சவால்” என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தற்போது உலக வங்கியுடன் இணைந்து 10 ஆண்டு கூட்டாண்மை திட்டத்தை (CPF) செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். இதில் பாதி தனியார் துறையின் முதலீடுகளிலிருந்து வரும்.
1-மனித வளம் மற்றும் அடிப்படை வசதிகளில் முதலீடு,
2-வணிகத்திற்கு ஏற்ற விதிமுறைகள்,
3-சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதி, காப்பீடு வழங்குதல்
என பாகிஸ்தானின் வேலைவாய்ப்பு திட்டம் 3 முக்கிய தூண்களில் அமைந்துள்ளதாக பங்கா கூறியுள்ளார்.
விவசாயம், சுற்றுலா, அடிப்படை சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம் மட்டும் 2050-க்குள் தேவையான வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானின் மின்சார துறை மிகப்பெரிய சவாலாக உள்ளது. விநியோகத்தில் உள்ள இழப்புகள் மற்றும் கடன் சுமை, வளர்ச்சியைத் தடுக்கின்றன. இதை சரிசெய்வது அவசர முன்னுரிமை என பங்கா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan jobs creation World Bank, Pakistan must create 30 million jobs, World Bank Ajay Banga, Pakistan economy news, Pakistan employment crisis, Pakistan youth unemployment World Bank warning