வளர்ந்து வரும் நாடுகளை மாற்றியமைக்கும் சிறிய AI - உலக வங்கி
World Bank says small AI to Boost Developing Nations: உலக வங்கி, வளர்ந்து வரும் நாடுகள் தங்களுக்கேற்ற “சிறிய AI” (Small AI) மாடல்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய AI மாடல்கள் குறைந்த இணைய இணைப்புடன் கூட மொபைல் போன்களில் இயங்கக்கூடியவை. இதனால், நூற்றாண்டுகள் எடுக்கும் பொருளாதார வளர்ச்சி சில தசாப்தங்களில் நிகழலாம் என உலக வங்கியின் தலைமை அறிவு அதிகாரி பாஸ்கல் டோனோஹோ தெரிவித்துள்ளார்.

“சிறிய AI” என்பது குறுகிய தரவுத்தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட தேவைகளுக்காக பயிற்சியளிக்கப்பட்ட மாடல்களாகும்.
உதாரணமாக, இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் பரிசோதனை முடிவுகளை தங்கள் மொழியில் பெறுவதற்கு ‘AgriConnect’ திட்டத்தில் AI உதவுகிறது.
உலக வங்கி, அரசுகள் மற்றும் தனியார் துறைகள் இணைந்து இத்தகைய AI தீர்வுகளை உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஆனால், IMF நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, AI வெற்றியடைய அடிப்படை வசதிகள் அவசியம் என எச்சரித்துள்ளார்.
“மின்சாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஆகியவை இல்லாமல் AI-ஐ மக்கள் பயன்படுத்த முடியாது” என அவர் கூறினார்.
அதே நேரத்தில், AI வேலைவாய்ப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் 40 சதவீத வேலைகள் AI மூலம் மாற்றப்படவோ, நீக்கப்படவோ வாய்ப்பு உள்ளதாக IMF எச்சரித்துள்ளது.
குறிப்பாக, புதிய தலைமுறை இளைஞர்களுக்கு இது சவாலாக இருக்கும் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, தனியார் முதலீடுகளை ஈர்ப்பது முக்கியம் என வலியுறுத்தி, கடந்த ஆண்டு 120 பில்லியன் டொலர் முதலீட்டை உலக வங்கி உறுதி செய்ததாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |