மேல் நடுத்தர வருமான நாடாக உயர்ந்த இலங்கை - இந்தியாவின் நிலை என்ன?

Sri Lanka World Bank India
By Karthikraja Jul 03, 2026 08:15 AM GMT
Report

இலங்கை கீழ் நடுத்தர வருமானத்திலிருந்து, மேல் நடுத்தர வருமான நாடாக முன்னேறியுள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார வகைப்பாடு

உலக வங்கியின் வளர்ச்சித் தரவுக் குழு, முந்தைய நிதியாண்டின் தனிநபர் மொத்த தேசிய வருமான (GNI) மதிப்பீடுகளின்படி நாடுகளின் பொருளாதாரங்களை குறைந்த, கீழ்-நடுத்தர, மேல்-நடுத்தர மற்றும் உயர் என 4 வருமானக் குழுக்களாகப் பிரிக்கிறது.

218 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான பதிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வகைப்பாடு, ஜூன் 2027 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். 

மேல் நடுத்தர வருமான நாடாக உயர்ந்த இலங்கை - இந்தியாவின் நிலை என்ன? | World Bank Srilanka To Upper Middle Income Status

தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI) 1,136 டொலர் முதல் 4,495 டொலர் வரை உள்ள நாடுகள் கீழ் நடுத்தர வருமானப் பொருளாதாரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

அதே சமயம் 4,496 டொலர் முதல் 13,935 டொலர் வரை வருமானம் உள்ளவை மேல் நடுத்தர வருமானப் பிரிவில் வருகின்றன.

ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை அளவிடும் GDP போல் இல்லாமல், GNI என்பது, அந்த வருமானம் எங்கிருந்து ஈட்டப்பட்டாலும், ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றும் வணிகங்களால் ஈட்டப்படும் மொத்த வருமானத்தை அளவிடுகிறது. 

ஃபார்முலா 1 வெற்றி மேடையில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்

ஃபார்முலா 1 வெற்றி மேடையில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்

இந்த வகைப்பாடுகள் எந்தெந்த நாடுகள் சலுகைக் கடன்கள் மற்றும் மேம்பாட்டு உதவிகளைப் பெறலாம் என்பதைத் தெரிவிப்பதோடு, உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உதவுகின்றன.

மேல் நடுத்தர வருமான நாடாக உயர்ந்த இலங்கை

இதில், இலங்கை, ஜோர்டான், மைக்ரோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய 5 நாடுகள் கீழ் நடுத்தர வருமானத்திலிருந்து, மேல் நடுத்தர வருமானத்திற்கு முன்னேறியுள்ளது.

டோகோ என்ற ஒரு நாடு குறைந்த வருமானத்திலிருந்து, கீழ் நடுத்தர வருமானத்திற்கு நகர்ந்தது.

மேல் நடுத்தர வருமான நாடாக உயர்ந்த இலங்கை - இந்தியாவின் நிலை என்ன? | World Bank Srilanka To Upper Middle Income Status

இலங்கையை ஒரு மீட்சியின் கதை என குறிப்பிட்டுள்ள உலக வங்கி, "2022-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற 3 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு தொழில்துறைகளில் ஏற்பட்ட மீட்சி மற்றும் நிதி, சுற்றுலா சேவைகளின் வளர்ச்சியால், 2025-ல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சி கண்டது" என தெரிவித்துள்ளது.

மேலும், "நாடு அந்த வரம்பை மிகக் குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே கடந்தபோதிலும், இந்த மறுவகைப்பாடு மீள்திறனின் ஓர் அடையாளமாகும்," என்றும் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு வரை குறைந்த வருமான பிரிவில் இருந்த இந்தியா, 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கீழ் நடுத்தர வருமானப் பிரிவிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US