அடங்க மறுக்கும் ரஷ்யாவுக்கும் உடன் கூட்டு சேர்ந்த பெலாரஸுக்கும் வைக்கப்பட்ட செக்! முக்கிய அறிவிப்பு
ரஷ்யா மற்றும் பெலாரஸில் நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக உலக வங்கி புதன்கிழமை அன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்தே இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களுக்கு எதிரான விரோதங்களை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி, கல்வி மேம்பாடு, கொரோனா நிதி உள்ளிட்ட பெலாரசுடன் ஒப்பந்தம் செய்திருந்த $1.2 பில்லியன் மதிப்பிலான 11 திட்டங்களை ரத்து செய்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் அனைத்து அக்கிரமங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்திருந்த $370 மில்லியன் மதிப்பிலான 4 திட்டங்களையும் ரத்து செய்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனுக்கு $3 பில்லியன் மதிப்பில் உதவிகளை தயார் செய்வதாக உலக வங்கி சமீபத்தில் அறிவித்ததோடு அதில் குறைந்தபட்சம் $350 மில்லியன் உடனடி நிதியாக இருக்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.