கிரேன் மூலம் தூக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பாம்பு! எங்கு தெரியுமா? சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி
உலகின் மிகப்பெரிய பாம்பு, கரீபியன் காட்டில் கிரேன் மூலம் தூக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
டொமினிகா மழைக்காடுகளின் ஒரு பகுதியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மிகப்பெரிய பாம்பை கண்டு அதிர்ந்து போனார்கள்.
பின்னர் உயிருடன் இருந்த அந்த பாம்பு கிரேன் மூலம் அங்கிருந்து தூக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய பாம்பு என கூறப்படும் அது 10 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டதாக உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்ட நிலையில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
வீடியோவில் உள்ள அந்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என இன்னும் தெரியவில்லை.
பொதுவாக அங்குள்ள தீவுகளில் கொடிய விஷம் கொண்ட boa constrictor வகை பாம்புகள் இருக்கும் எனவும், அது 13 அடி வரை நீளம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.