உலகளவில் கொரோனா பாதிப்பு 15.89 கோடியை தாண்டியது!
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகளவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 15,89,54,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில் 33,06,824 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 13,73,80,659 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 1,82,67,526 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,07,153 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திலும், அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,34,76,781 ஆகவும், அதனையடுத்து 2,26,62,410 பேர் பாதித்து இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.