1 கிலோ மாம்பழம் 2.7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை: ஆச்சரியப்படுத்தும் ஜப்பான் விவசாயி
ஜப்பானை சேர்ந்த விவசாயி ஒருவர் 1 கிலோ மாம்பழத்தை இந்திய ரூபாய் மதிப்பில் 2.7 லட்சம் விலைக்கு விற்பனை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
1 கிலோ மாம்பழம் 2.7 லட்சம் ரூபாய்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் எப்போதும் அனைவராலும் விரும்பப்பட கூடியது, பொதுவாக கோடை காலத்தில் அதிகப்படியாக விளைச்சல் காணப்படும் இந்த மாம்பழங்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விளைவிக்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் சேலத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்களுக்கு தனி மவுசு உண்டு, அவற்றின் விலை கிலோ 60 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கைச் சேர்ந்த நககாவா என்ற விவசாயி 1 மாம்பழத்தை 19 ஆயிரத்திற்கும், 1 கிலோ மாம்பழத்தை 2.7 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்த பிரம்மாண்ட தொகைக்கு முக்கிய காரணமாக விளைவிக்கப்படும் பகுதியில் நிலவும், பனியும், வெப்ப நீருற்றுகளுமே காரணம் என சொல்லப்படுகிறது.
மாம்பழத்திற்கு பின் உள்ள ரகசியம்
எண்ணெய் வியாபாரியாக இருந்த நககாவா கடந்த 2011ம் ஆண்டு மாம்பழ சாகுபடியில் இறங்கியுள்ளார், இது தொடர்பான ஆலோசனையை வேறொரு மாம்பழ விவசாயிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.
? Japan’s secret to $230 winter mangoes? Tricking the fruit.@rumireports visits a farmer using heat from onsen hot springs to create a tropical climate in snowy Hokkaido https://t.co/nNbZNYZhtp pic.twitter.com/3W4DWriB73
— Bloomberg (@business) May 10, 2023
இது குறித்த நககாவா பேசிய தகவலில், இந்த பகுதியில் பனியும் வெப்ப நீரூற்றுகளும் இருப்பதால், குளிர் காலத்தில் உருவாகும் பனிகளை சேகரித்து வைத்து கொண்டு, கோடை காலம் வரும் போது பயிர்களின் வெப்பத்தை குறைக்க அந்த பனிகளை பயன்படுத்தேன்.
அதே சமயம் குளிர்காலத்தில் வெப்ப நீரூற்றுகளில் உள்ள தண்ணீர்களை பயன்படுத்தி பயிர்களை வெதுவெதுப்பாக வைத்து கொள்வேன்.
இதனால் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி போன்ற கெமிக்கல்கள் அதிகமாக தேவை படுவது இல்லை.
மாம்பழத்தின் சிறப்பம்சம்
இவ்வாறு பயிரிடுவதன் மூலம் விளையும் மாம்பழங்களில் 15 டிகிரி பிரிக்ஸ் அதிக அளவில் சர்க்கரை தன்னை மாம்பழத்தில் காணப்படுகிறது.
அத்துடன் மாம்பழங்கள் வெண்ணையை போன்று மிகவும் மென்மையாக காணப்படுவது சுவை அதிக அளவு உள்ளது என்பதை காட்டுகிறது.
எதிர்கால திட்டம்
சுமார் 5000 மாம்பழங்கள் வரை அறுவடை செய்யும் நககாவா, அந்த மாம்பழங்களை உள்ளூரில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்கிறார். இந்த மாம்பழங்களுக்கு ஹகுகின் என்ற டிரேட் மார்க்கையும் நககாவா பெற்றுள்ளார்.
2014ல் மாம்பழத்தை 400 டாலருக்கு விற்பனை செய்த நககாவா, தற்போது 230 டாலருக்கு விற்பனை செய்கிறார்.
ஆசியாவின் சிறந்த பெண் செஃப் 2022 என்ற விருதை பெற்ற நட்சுகோ ஷோஜி நடத்தும் உணவகம் நககாவாவின் தொடர் வாடிக்கையாளர்கள் ஆவர்.
இதற்கிடையில், பிரதேசத்தில் நிலவும் இந்த கால மாற்றத்தை பயன்படுத்தி அதற்கேற்ற பயிர்களை விளைவிக்கவும் நககாவா திட்டமிட்டுள்ளார்.