ஒரு கிலோ ரூ.15,000.., உலகின் மிக விலையுயர்ந்த அரிசி எது தெரியுமா?
Which is the world costliest rice- இந்திய மக்கள் அரிசியை மிகவும் விரும்பி உண்பவர்கள்.
உலக அளவில் பல அரிசி வகைகள் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், பாஸ்மதி மிகவும் பிரபலமானது.
தென்னிந்திய மக்கள் பெரும்பாலும் மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடும் மக்கள் அதிகம் உள்ளனர்.
அந்தவகையில், உலகின் மிக விலையுயர்ந்த அரிசி எது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி, ஜப்பான் நாட்டில் உள்ள ஒருவகை அரிசி தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த அரிசியாக இருக்கிறது.
ஜப்பான் நாட்டில் உள்ள டோயோ எனும் அரிசி நிறுவனம் கின்மேமை எனும் அரிசி வகையை தயாரித்துவருகிறது.
இந்த அரிசி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இந்த டோயோ நிறுவனம் மட்டுமே கின்மேமை அரிசிக்கு காப்புரிமையும் பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த அரிசி சமைப்பதற்கு முன்பு கழுவ வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல், இந்த கின்மேமை அரிசியில் அதிகளவு ஊட்டச்சத்தும் இருப்பதால் இது மிகவும் பிரபலமானது.
இந்த கின்மேமை அரிசியில் சாதாரன அரிசியைவிட 1.8 மடங்கு அதிகமான ஃபைபர் மற்றும் ஏழு மடங்கு அதிகமாக வைட்டமின் பி1 சத்து இருக்கிறது.
இந்த கின்மேமை அரிசியின் ஒரு கிலோ விலை சராசரியாக ரூ. 15,000 என்று சொல்லப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |