அவருக்காக உலக கோப்பை வெல்வது எங்கள் கடமை: ரோஹித் சர்மா சூளுரை
உலக கோப்பையை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-காக வெல்லுவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையை வெல்லப்போவது யார்?
குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
2003ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு, அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதால், சர்வதேச அளவில் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாததால், இந்தியா இந்த முறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா கருத்து
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டிற்காக மிகப்பெரிய காரியங்களை செய்துள்ளார்.
அவர் உலக கோப்பையை வெல்லும் அணியில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பது அவரது மிகப்பெரிய ஆசை, எனவே அவருக்காக உலக கோப்பை வெல்வது எங்களது கடமை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |