ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த மெஸ்ஸி! தாயகம் திரும்பிய அர்ஜென்டினா அணி
கத்தார் 2022ம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, திங்கட்கிழமை அர்ஜென்டினா கால்பந்து குழு தாயகம் திரும்பியுள்ளது.
கோப்பையுடன் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா
கத்தாரில் நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 1986ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அர்ஜென்டினா அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அர்ஜென்டினா அணி திங்கட்கிழமையான நேற்று அவர்களின் தாயகமான பியூனஸ் அயர்ஸுக்குத் திரும்பியுள்ளது.
Sky News
பியூனஸ் அயர்ஸில் விமானத்தில் இருந்து கோப்பையுடன் இறங்கிய மெஸ்ஸி மற்றும் அனைத்து வீரர்கள் குழுவினரையும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், நிருபர்கள், மற்றும் இசைக்குழுவினர் பிரம்மாண்டமாக வரவேற்றனர் திரளான ஆதரவாளர்கள் தேசிய வண்ண ஆடைகளை அணிந்து கொண்டு வந்திருந்தனர்.
தேசிய விடுமுறை
அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்று சாதனை படைத்து இருக்கும் நிலையில், செய்வாய்கிழமையை தேசிய விடுமுறையாக அந்த நாடு அறிவித்துள்ளது.
கத்தாரில் இருந்து பியூனஸ் அயர்ஸுக்குத் திரும்பியுள்ள அர்ஜென்டினா அணி கால்பந்து சங்கத்தின் பயிற்சி மைதானத்தில் இரவைக் கழிப்பார்கள் என்று மாநில ஊடக நிறுவனமான Télam தெரிவித்துள்ளது.
Sky News
ரசிகர்கள் சந்திப்பு தொடர்பாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "உலக சாம்பியன் பட்டத்தை ரசிகர்களுடன் கொண்டாடுவதற்காக உலக சாம்பியன் அணி செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒபெலிஸ்கிற்கு புறப்படும்" என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தெரிவித்துள்ளது.
Sky News
Sky News