அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்கள் - ஜோதிடம் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!
பூமி என்றாவது ஒரு நாள் அழியும் என பலரும் கூறிவருகின்றனர். பல ஜோதிடர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருக்கும் ஆபத்து குறித்து கணிப்பார்கள்.
அந்தவகையிவ் வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சில அசம்பாவிதம் குறித்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
உலகப் போர்
2025 ஆம் ஆண்டில் செவ்வாய் மற்றும் சனி ஒரே ராசியில் இணையும் என்றும், இந்த சேர்க்கை உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜோதிடத்தை கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது உலக நாடுகளில் அமையின்மையை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.
ஓம் மலையில் மறைந்த ஓம்
இமயமலையில் உள்ள ஓம் மலையை சிவனின் இருப்பிடமாக கருதப்படுகிறது. அங்கு சிவன் வசிப்பதாகவும் நம்புகிறார்கள். மலையில் படியும் பனி ஓம் வடிவில் தெரியும். ஆனால் இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக ஓம் மலையிலிருந்து பனி முற்றிலும் மறைந்துள்ளது. இது வெப்பமடைதல் மற்றும் காநிலை மாற்றத்தின் அறிகுறி என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நிகழ்ந்த அசம்பாவிதம்
ஒவ்வொரு ஆண்டும் பூரியில் ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறும். ஜெகந்நாதர் தனது உடன்பிறப்புகளுடன் பூரியில் உள்ள தனது வீட்டிலிருந்து குண்டிச்சாவில் உள்ள அத்தை கோவிலுக்குச் செல்வதே இந்த ரத யாத்திரையின் நோக்கம். இவ்வருடம் நிகழ்ந்த யாத்திரையின் போது பாலபத்ர பகவானின் சிலை ரதத்திலிருந்து கீழே விழுந்தது. இது அபசகுணமாகவும் அழிவின் அறிகுறியாகவும் மக்கள் பார்க்கின்றனர்.
குமாரி தேவியின் அழுகை
நேபாளத்தில் பருவ வயதை அடையும் வரை இருக்கும் சிறுமிகளுக்கு தேவி அந்தஸ்து கொடுத்து வழிபடுகிறார்கள். வயதை எட்டியவுடன் தெய்வீக அந்தஸ்து மற்றொரு பெண்ணுக்கு மாற்றப்படும். அவர்கள் தான் குமாரி என அழைக்கப்படுவார்கள். சமீபத்தில் இந்திர ஜாத்ராவில் குமாரி ஒருவர் தனது ரதத்திலிருந்து கீழே விழுந்து அழுதாள். இது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் தேவதை அழுவது பெரிய பேரழிவைக் குறிக்கிறது எனவும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |