அம்பானி வீட்டு திருமணத்தில் உலக புகழ்பெற்ற சமையல் கலைஞரின் கைவண்ணம்.., அப்படி என்ன உணவு?
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கான சைவ உணவை சமைத்த சமையல் கலைஞரை பற்றி பார்க்கலாம்.
பிரம்மாண்ட திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற 'சங்கீத்' விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது.
சமையல் கலைஞர்
இவர்களின் திருமணத்திற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கான சைவ உணவை பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ரெஸ்டாரென்டான சென்டரலின் உரிமையாளரும் சிறந்த சமையல் கலைஞருமான விர்கிலியோ மார்ட்டினெஸ் தான் சமைத்தார்.
இவரது உணவு மெனுவில் பெருவில் கிடைக்கும் அரிய காய்கறிகள் வைத்து சமைக்கப்பட்டிருந்தது. விர்கிலியோ மார்ட்டினெஸ் மற்றும் அவரது குழுவினரை முகேஷ் அம்பானி மும்பைக்கு அழைத்திருந்தார்.
அம்பானி வீட்டு திருமணத்தில் அவர் கொடுத்த மெனுவில், "ஸூச்சினி மற்றும் அஸ்பாரகஸ் டிராடிட்டோ, பர்ப்பிள் அமரந்த், கேஷ்யூ ரோல், மவுன்ட்டன் சிமிச்சுரி, பிரஷ் சீஸ், அவகேடோ எமல்ஷன் அண்டு பெருவியன் கார்ன், கேன்டலூப் செவிச்சே, பர்ராடா, டேட்ஸ் அண்டு லென்டில்ஸ் டிரையாங்கிள்ஸ், பிஸ்டாச்சியோ டைகர்ஸ் மில்க், எக்ஸ்ட்ரீம் ஆல்டிடியூட் சீட்ஸ் அண்டு ஸ்மோக்டு டொமேட்டோ, அமேசானியன் கசாவா டெக்ஸ்சர்ஸ், கோகனட் மில்க்" ஆகியவை இருந்தன.
இவரது உணவை சுவைத்த வெளிநாட்டு விருந்தினர்கள் மனதார பாராட்டினர். அதோடு, தாலும் பனீரும் மெனுவில் இல்லாதது குறித்தும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |