ஏலத்தில் விற்கப்பட்ட முதன்முதலில் அறிமுகமான ஐபோன்! என்ன விலைக்கு போச்சு தெரியுமா?
முதன் முதலில் வெளியிடப்பட்ட ஐபோன் ஏலத்தில் விற்பனை.
அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் $35,000க்கு விற்பனையானது.
பிரிக்கப்படாத 2007 ஐபோன் மொடல் பெரிய விலைக்கு ஏலத்தில் விற்பனையானது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மொடல்களை அறிமுகம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஐபோனின் முதல் மொடலை 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் செய்யவே கூடாத 5 விஷயங்கள்!
இந்த நிலையில் பிரிக்கப்படாத 2007 ஐபோன் மொடல் போன் அமெரிக்காவில் ஏலத்தில் விற்பனைக்கு வந்தது. இந்த போன் $35,000க்கு விற்பனையானது (இலங்கை மதிப்பில் ரூ.1,25,38,753.50)
postsen
முதல் தலைமுறை ஐபோன் மொடலில் தொடுதிரை வசதி, ஐபாட், கேமரா, பிரவுசிங் வசதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐபோன் அறிமுக நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேக்வொர்ல்டு கன்வென்ஷனில் நடைபெற்றது.
மேலும் 2MP கேமரா, விஷூவல் வாய்ஸ் மெயில், வெப் பிரவுசர் போன்ற அம்சங்கள் உள்ளன.
அதே நேரம் பெட்டியின் உள்ளே பிரிக்கப்படாமல் இருந்த அந்த ஐபோனின் நிலை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீல் செய்யப்பட்ட நிலையில் இருக்கும் அந்த போன் புத்தம் புதிய நிலையில் தான் இருக்க வேண்டும்.
redmondpie