உலகின் மகிழ்ச்சியான நாடுகள் 2024: முதலிடத்தில் யார்?
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து தக்கவைத்துள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடு
ஐ.நா. வின் ஆதரவுடன் வெளியிடப்படும் "உலக மகிழ்ச்சி அறிக்கை" புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தனது முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
தனி நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மகிழ்ச்சியை அளவிடும் இந்த அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
பலமான சமூக ஆதரவு அமைப்புகள், நிறுவனங்களில் மக்களின் நம்பிக்கை, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையே சமநிலை ஆகியவை பின்லாந்தின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் என்று அறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காரணிகள் பின்லாந்து மக்களின் நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
Happiness doesn't just – happen. On this #WorldHappinessDay, we asked people in #Finland – the happiest country in the world for the 7th year running – to share their happiness tips with the world. 💙 pic.twitter.com/s8aMQeCSxq
— thisisFINLAND (@thisisFINLAND) March 20, 2024
முன்னேறிய மற்றும் பின்தங்கிய நாடுகள்
பின்லாந்து முதலிடத்தை தக்க வைத்திருந்தாலும், சில நாடுகளின் தரவரிசையில் மாற்றங்கள் இருப்பதைக் காணலாம். டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் போன்ற பிற நோர்டிக் நாடுகளும் பின்லாந்துக்கு அடுத்தபடியாக இந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் முதல் 20 இடங்களில் இருந்து வெளியேறின. அவை 23 வது மற்றும் 24 வது இடத்தை பெற்றுள்ளன.
இதற்கு மாறாக, கோஸ்டாரிகா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களில் இடம் பிடித்துள்ளன. கடைசி இடம் கணக்கிடப்பட்ட 143 நாடுகளின் இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
2020ம் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு நிலவி வரும் நிலையற்ற தன்மை மற்றும் மனிதாபிமான பேரழிவுகள் காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டை போலவே இந்தியா 126 வது இடத்தில் நீடிக்கிறது. இந்தியா தற்போது மொத்தம் 140 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது
முதன்மையான 10 இடங்களை பிடித்துள்ள நாடுகளில் நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா அகிய நாடுகள் மட்டுமே 15 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளன.
முதன்மையான 20 இடங்களை பிடித்துள்ள நாடுகளில் கனடா மற்றும் நெதர்லாந்து மட்டுமே 30 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Finland happiest country, World Happiness Report 2024, Nordic countries happiest, UN happiness report, USA falls in happiness ranking