உலகின் மிகப்பெரிய போர் கப்பலில் விபத்து: கிரீட் தீவுக்கு திருப்பி விட்ட அமெரிக்கா
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக கிரீட் தீவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பலான USS Gerald R.Ford-இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கிரீட்(Crete) தீவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
USNI தகவலின் படி, யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்.போர்டு கப்பலின் சலவைப் பிரிவில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான முழு விளக்கமும், சேதங்கள் தொடர்பான விவரமும் இன்னும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க அதிகாரி வழங்கிய தகவலில், USS Gerald R.Ford போர்க்கப்பல் கிரீட் தீவின் சூடா பே(Souda Bay) கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு அமெரிக்க ராணுவ தொழில்நுட்ப குழுவினர் கப்பலின் உட்புறத் கட்டமைப்புகளை சோதனையிட்டு பாதிப்புகளை சரி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு முன்னதாக, USS Gerald R.Ford போர்க்கப்பல் செங்கடல் பகுதியில் செயல்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |