1,247 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்!
அமெரிக்காவில் நடந்த போட்டி ஒன்றில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
பூசணிக்காய் போட்டி
அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் 50 -வது போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், தங்களுடைய விவசாய நிலங்களில் பூசணிக்காய் வளர்க்கும் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ரூ.25 லட்சம் பரிசு
அந்தவகையில், மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான டிராவிஸ் கிரெய்கர் (43) என்பவர் கலந்து கொண்டார். இவருடைய பூசணிக்காய் மிகப்பெரியதாக இருந்ததால் முதல் பரிசாக இவருக்கு அறிவித்து ரூ.25 லட்சம் பரிசுத்தொகை பெற்றார்.
அதாவது, இவருடைய பூசணிக்காயின் எடையானது 1,247 கிலோகிராம் ஆகும். இதனால், இதனை பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர். இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது பற்றி சமையல் நிபுணர்கள் கூறுகையில், "டிராவிஸ் வளர்த்த பூசணிக்காயை கொண்டு அமெரிக்கர்கள் விரும்பி உண்ணும் 'பை' (pie) எனும் உணவில் 687 எண்ணிக்கைகள் வரை தயாரிக்க முடியும்" என்கிறார்கள்.
இதற்கிடையே, இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த பூசணிக்காய் டிராவிஸ் பூசணிக்காயை விட 113 கிலோகிராம் எடை மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ,,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |