உலகின் மிகப்பெரிய விமானத்தை தவிடுபொடியாக்கி அழித்து உக்ரைனுக்கு ஷாக் தந்த ரஷ்யா! வெளியான வீடியோ காட்சி
உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்யா அழித்து தவிடுபொடியாக்கி உள்ளது.
போரை முடிக்கு கொண்டு வர உக்ரைன் - ரஷ்யா இடையே நேற்று பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது எனினும் முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இதனிடையில் ஆறாவது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய படையினரின் குண்டுவீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாதெரிவித்தார்.
இந்த விமானம்உக்ரைனுக்குச் சொந்தமானதாகும். ஏஎன்-225 ‘மிரியா’ என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா, ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டது.
நமது மிரியாவை ரஷ்யா அழித்திருக்கலாம். ஆனால் வலுவான சுதந்திரமான ஜனநாயக ஐரோப்பியநாடு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான மிரியா விமானம் உக்ரைனின் அன்டோனோ நிறுவனத்தால் கடந்த 1985-ம் ஆண்டுதயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி நீள இறக்கைகளைக் கொண்ட இதில் 4,500 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பறந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.