விமானி இல்லாமலே உலகின் பெரிய சரக்கு விமானத்தை பறக்க விட்ட சீனா
world largest unmanned cargo plane makes maiden flight: W5000 என்ற சரக்கு விமானம், உலகின் மிகப்பெரிய ஆளில்லா சரக்கு விமானம் என அழைக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 14 ஆம் திகதி, இந்த விமானம் வெற்றிகரமாக சோதனை பரப்பை நிறைவு செய்தது.
உலகின் பெரிய தானியங்கு சரக்கு விமானம்
சுமார் 600 மீட்டர் தூரம் ஓடுபாதையில் ஓடிய இந்த W5000 விமானம், வினாடிக்கு 5 மீட்டர் என்ற ஏற்ற விகிதத்திலும் மேலேறி, பின்னர் விமான நிலையத்திலிருந்து 1,000 மீட்டர் உயரத்திற்கு, மணிக்கு சுமார் 220 கி.மீ. என்ற வேகத்தில் சுமார் 30 நிமிடங்கள் பறந்து பின்னர் தரையிறங்கியது.

சுமார் 30 நிமிட விமானப் பயணத்தின் போது, அந்த விமானம் மேலே ஏறுதல், சமதளப் பறத்தல், திரும்புதல், கீழே இறங்குதல், மற்றும் அணுகித் தரையிறங்குதல் உள்ளிட்ட தொடர்ச்சியான சோதனை இயக்கங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
சீன விமான தொழில்நுட்ப நிறுவனமான ஏர் ஒயிட் வேல் மூலம் உருவாக்கப்பட்ட இந்த விமானம், 5 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது, 2,600 கிலோமீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது, மேலும் 65 கன மீட்டர் சரக்கு இடவசதியை வழங்குகிறது.
NO PILOT ON BOARD: China's W5000, 'WORLD'S LARGEST UNCREWED CARGO AIRCRAFT', COMPLETES flight test Hauls 5,000 KG over 2,600 KM — 1 ground crew can monitor 6-7 PLANES at once Cuts costs by OVER 40% vs piloted cargo planes https://t.co/gELSpA3t5D
— RT (@RT_com) November 14, 2026
இந்த விமானத்தில் W5000 ல் பயன்படுத்தப்படும் அதன் உந்துவிசை, விமானக் கட்டுப்பாடு மற்றும் வானூர்தி மின்னணுவியல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து 220,000 பாகங்களும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே பெறப்படுகின்றன.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட டர்போப்ராப் என்ஜின் மற்றும் கார்பன் ஃபைபர் கலவைகளால் ஆன கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்கள் விமானத்தின் ஒட்டுமொத்த எடையைக் குறைத்து, அதன் கட்டமைப்பு வலிமையைப் பராமரிக்க உதவுகின்றன.
இதன் மூலம் அதன் சரக்கு ஏற்றிச் செல்லும் திறனை அதிகரிக்கின்றன. மேலும், இந்த விமானம் குறைந்த எரிபொருள் நுகர்வைக் கொண்டிருப்பதோடு, விமானிகள் மற்றும் காக்பிட் உபகரணங்களின் தேவையையும் நீக்குகிறது, இது இயக்கச் செலவுகளைக் குறைக்க உதவுகிறது.
பிராந்திய தளவாடங்கள், பிராந்தியங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து, குளிரூட்டப்பட்ட போக்குவரத்து மற்றும் அவசரகால விநியோகங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குப் போக்குவரத்துப் பயன்பாடுகளுக்காக இந்த விமானம் உருவாக்கப்பட்டு வருகிறது.
W5000 திட்டத்திற்காக மொத்தம் 835 விமானங்கள் வாங்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வணிகச் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர், 19 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட, 10 டன் எடையுள்ள மின்சார வர்த்தக விமானத்தை முதல் முறையாக மனிதர்களுடனான பரப்பை வெற்றிகரமாக சோதனை நடத்தியது.