ஆபரேஷன் சிந்தூர்; இது அவமானகரமானது - டிரம்ப் சொல்வது என்ன?
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
இந்தியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள்பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளன.
டிரம்ப்
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பிய போது, "இது அவமானகரமானது. ஓவல் அலுவலகத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போது, இப்போதுதான் இந்திய தாக்குதல்கள் குறித்துத் தெரிய வந்தது. விரைவில் இது முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சூழ்நிலையை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், அமைதியான தீர்வை நோக்கி நகர இரு நாடுகளின் தலைமை உடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என அமெரிக்க அரச செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
I am monitoring the situation between India and Pakistan closely. I echo @POTUS's comments earlier today that this hopefully ends quickly and will continue to engage both Indian and Pakistani leadership towards a peaceful resolution.
— Secretary Marco Rubio (@SecRubio) May 6, 2025
"இந்த தாக்குதலுக்கு வருந்துவதாகவும், அனைவரின் பாதுகாப்புக்காகவும் விரைவில் அமைதி திரும்பவும் நாங்கள் பிராத்திக்கிறோம்" என ஈரான் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |