ரத்ததானத்தில் உலக சாதனை - 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய தனி மனிதன்
உலகில் அதிக முறை ரத்ததானம் செய்த நபர் உயிரிழந்துள்ளார்.
ரத்ததானத்தில் உலக சாதனை
அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன்(James Harrison), அதிக முறை ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ததற்கான உலக சாதனையை படைத்தார்.
தற்போது அவருக்கு 88 வயதான நிலையில், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று முதியோர் இல்லத்தில் வைத்து தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அரிய ஆண்டிபாடி
கர்ப்ப காலத்தின் போது, தாயின் ரத்த சிவப்பணுக்கள் கருவில் வளரும் குழந்தையின் ரத்த சிவப்பணுக்களுடன் பொருந்தாத போது HDFN அல்லது ஹீமோலிடிக் போன்ற நோய்கள் ஏற்படும். இந்த நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க Anti-D என்னும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசியை உருவாக்குவதற்கு தேவையான Anti-D என்னும் அரிய ஆண்டிபாடி ஜேம்ஸ் ஹாரிசன் உடலில் அளவுக்கதிகமாக உள்ளது.
14 வயதில், அவருக்கு மார்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது, அதிக அளவில் ரத்த மாற்றம் செய்யப்பட்டதால் இந்த ஆண்டிபாடி அதிகரித்திருக்கும் என கூறப்டுகிறது.
'தங்கக் கை மனிதர்' என அழைக்கப்படும் இவர், தனது 18 வயதில் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்ய தொடங்கினார்.
தொடர்ந்து 88 வயது வரை, 2 வாரத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்துள்ளார். அவுஸ்திரேலியாவில் 200 க்கும் குறைவான நபர்களே anti-D ஆன்டிபாடிகளை தானம் செய்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள 200 க்கும் குறைவான anti-D ஆன்டிபாடிகளை தானம் செய்யும் நபர்கள் மூலம், ஆண்டுக்கு ஏறக்குறைய 45,000 தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் பயனடைகின்றனர்.