உலகிலேயே பெருந்தொகை ஜீவனாம்சம் அளிக்கப்பட்ட 5 விவாகரத்துகள்... அதிக தொகை செலுத்திய பிரபலம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவை விவாகரத்து செய்துள்ள நிலையில், சானியா மிர்சாவுக்கு சோயிப் மாலிக் எவ்வளவு தொகை ஜீவனாம்சம் அளிப்பார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
முதலிடத்தில் பில் கேட்ஸ்
பாகிஸ்தான் நாட்டிலேயே பெரும் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் சோயிப் மாலிக்கும் ஒருவர். அவரது மொத்த சொத்து மதிப்பு என்பது 28 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. அதாவது இந்திய பண மதிப்பில் சுமார் 232 கோடி ரூபாய்.
சானியாவுக்கு அவர் எவ்வளவு தொகை ஜீவனாம்சம் அளிக்க இருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் உலகிலேயே பெருந்தொகை ஜீவனாம்சம் அளிக்கப்பட்ட 5 விவாகரத்துகளின் பட்டியலில் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார்.
2021ல் தமது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்துவிட்டு அவருக்கு ஜீவனாம்சமாக 76 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை அளித்தார். அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 63,18,39,30,00,000 கோடி.
கடந்த 2019ல் அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட் தம்பதி தங்கள் திருமணத்தை முறித்துக்கொண்டனர். தொடர்ந்து அதே ஆண்டு விவாகரத்தும் பெற்றனர்.
அமேசான் பங்குகள்
இதனையடுத்து ஜீவனாம்சமாக 4 சதவிகித அமேசான் பங்குகளை மெக்கென்சி பெற்றுக்கொண்டார். அதன் மதிப்பு அப்போது 36 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்பட்டது. இந்திய பண மதிப்பில் ரூ 29,92,64,40,00,000 கோடி.
பெரும் கோடீஸ்வரரான Alec Wildenstein கடந்த 1999ல் தமது மனைவி Jocelyn என்பவரை விவாகரத்து செய்து கொண்டார். இதனையடுத்து Jocelyn ஜீவனாம்சமாக 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை பெற்றுக்கொண்டார்.
ஹாலிவுட் நட்சத்திரமும் தொலைக்காட்சி பிரபலமுமான Kim Kardashian மற்றும் பாடகர் Kanye West தம்பதி விவாகரத்து செய்துகொண்டதை அடுத்து ஜீவனாம்சமாக 2.7 பில்லியன் டொலர் தொகையை கிம் பெற்றுக்கொண்டார். அத்துடன் குழந்தைகள் கவனிப்புக்கு என மாதம் 200,000 டொலர் தொகையும் Kim Kardashian பெற்றுவருகிறார்.
5வது இடத்தில் FOX News நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கீத் ரூபர்ட் முர்டோக் தமது இரண்டாவது மனைவி அன்னா மன் என்பவரை கடந்த 1999ல் விவாகரத்து செய்துகொண்டார். ஜீவனாம்சமாக 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை அன்னா அப்போது பெற்றுக்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |