உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக தெரிவான தமிழர்... ரூ 318,000 கோடி நிறுவனத்தை நடத்திவரும் இவர் யார்?
உலகின் சக்திவாய்ந்த பெண்களில் 100 பேர்கள் பட்டியல் வெளியானதில், இந்தியாவில் இருந்து அதில் நால்வர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லியில் பிறந்த தமிழர்
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்த 20வது பட்டியலில், கவனம் ஈர்த்த அரசியல் தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், பொழுதுபோக்கு துறை சார்ந்தவர்கள், நன்கொடையாளர்கள் என பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த பட்டியலில், இந்தியாவில் இருந்து நால்வர் தெரிவாகியுள்ளதுடன், அதில் ஒருவர் டெல்லியில் பிறந்த தமிழர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா என்பது தெரியவந்துள்ளது.
இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர், பெரும் நன்கொடையாளர் மட்டுமின்றி, இந்தியாவில் பட்டியலிடப்பட்ட ஐடி நிறுவனம் ஒன்றை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா.
HCL மென்பொருள் நிறுவனர் ஷிவ் நாடாரின் ஒரே ஒரு மகள் தான் இந்த ரோஷ்னி. கடந்த 2009ல் HCL மென்பொருள் நிறுவனத்தில் இணைந்த ரோஷ்னி, 2020 ஜூலை மாதம் முதல் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
வனவிலங்குகளில் வலுவான ஆர்வம்
HCL நிறுவனத்தின் தற்போதிய சந்தை மதிப்பு என்பது இந்திய பண மதிப்பில் ரூ 318,000 கோடி என்றே கூறப்படுகிறது. ஷிவ் நாடாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 227,010 கோடி. ரோஷ்னி வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார் மற்றும் தகவல் தொடர்பு இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
அத்துடன் MBA பட்டமும் பெற்றுள்ளார். மேலும், கல்வியை மையமாகக் கொண்ட ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார் ரோஷ்னி. மட்டுமின்றி வனவிலங்குகளில் வலுவான ஆர்வம் கொண்டவர் ரோஷ்னி.
2019 முதல் அனிமல் பிளானட்/டிஸ்கவரி தொலைக்காட்சிகளில் அது தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரித்தும் வருகிறார். 41 வயதான ரோஷ்னி நாடாரின் மொத்த சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ 84,330 கோடி என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |