ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்படுகிறது: பாப்பரசர் லியோ கடும் தாக்கு

Donald Trump Israel-Iran conflict Pope Leo XIV
By Arbin Apr 16, 2026 05:57 PM GMT
Report

கேமரூன் பயணத்தின் போது, ​​போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை விமர்சித்த போப் லியோ, ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்பட்டு வருவதாக கடுமையாகத் தாக்கியுள்ளார்.

சுயலாபத்திற்காக

கொடிய கிளர்ச்சியால் பேரழிவுக்குள்ளான ஒரு பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் லியோ, ​​தங்கள் சுயலாபத்திற்காகக் கடவுளின் பெயரையே திரித்துவிட்டதாகக் கூறியவர்களைக் கடுமையாகச் சாடினார்.

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்படுகிறது: பாப்பரசர் லியோ கடும் தாக்கு | World Ravaged By Tyrants Pope Leo

பாப்பரசரைக் கடுமையாகத் தாக்கி நீண்ட பதிவை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட பெரும் வாக்குவாதத்திற்குச் சில நாட்களுக்குப் பிறகு அவர் இந்தக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போரை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் பாப்பரசர் லியோ. போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீரிணையைத் திறக்கவும் வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் இணங்காவிட்டால், ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் குறித்து பப்பரசர் தனது கடுமையான பதிலைப் பதிவு செய்திருந்தார்.

அமெரிக்க தளங்களைக் குறிவைக்க... சீன செயற்கைக்கோளைப் பயன்படுத்திய ஈரான்

அமெரிக்க தளங்களைக் குறிவைக்க... சீன செயற்கைக்கோளைப் பயன்படுத்திய ஈரான்

அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பாக கடந்த வருடம் பொறுப்பேற்ற லியோ, முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கை அணுகுமுறையையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.

அப்போது தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஒரு பாப்பரசராக மட்டும் லியோ செயற்பட்டால் போதும் என குறிப்பிட்டிருந்தார்.

போர் வெறியர்கள்

ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போப், ட்ரம்ப்புடன் எந்த விவாதத்திலும் ஈடுபட விரும்பவில்லை என்றும், ஆனால் அமைதியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

கேமரூனில் உரையாற்றிய பாப்பரசர் லியோ, கொலைகளுக்கும் பேரழிவுகளுக்கும் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுகின்றன என்ற உண்மையைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்படுகிறது: பாப்பரசர் லியோ கடும் தாக்கு | World Ravaged By Tyrants Pope Leo

அழிப்பதற்கு ஒரு கணம் போதும், ஆனால் மீண்டும் கட்டமைப்பதற்குப் பல நேரங்களில் ஒரு வாழ்நாளே போதாது என்பதையும், போர் வெறியர்கள் அறியாதது போல் பாவனை செய்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

ஈரானில் நடக்கும் போர், பாப்பரசருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே முரண்பாடுகளை அதிகளவில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US