உக்ரைன் பகுதியை சுதந்திர நாடாக அறிவித்த ரஷ்யா! மேலும் அதிகரிக்கும் பதற்றம்
உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்களை அதிகம் கொண்ட கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்து இருப்பதற்கு அமெரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளும் தங்களின் பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் நேட்டோ அமைப்புகளின் தலைவர் என பலர் தெரிவித்துள்ள கண்டன கருத்துக்களை தொகுத்து இந்த கட்டுரை வழங்கியுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்:
உக்ரைனின் கிழக்கு எல்லைகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகிய பகுதிகளை சுதந்திர நாடாக அறிவித்து இருப்பதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகள் அனைத்தும் இணைந்து விரைவாகவும், தீர்க்கமான முடிவை எடுத்து உக்ரைனுக்கு துணை நிற்கும் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிட்டன் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyyவிடம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர்:
ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை உடைத்துவிட்டதாகவும், ரஷ்ய ஜனாதிபதி புதினின் தனிமைப்படுத்தல் முடிவால் ரஷ்ய மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த முடிவின் விளைவாக நேட்டோ மற்றும் ஐரோப்பா நாடுகளின் அமைப்புகள் ஒருங்கிணைந்து, உக்ரைனுடன், சட்டங்களின் மீது நம்பிக்கை கொண்டு இணைந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்:
உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளை சுகந்திர பகுதிகளாக அறிவித்து இருப்பது உக்ரைனின் இறையாண்மை காயப்படுத்தும் வரம்புமீறிய செயல் என்றும் இந்த முடிவை வலுவாக கண்டிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளின் அவசர கால கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்:
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உக்ரைனின் நேர்மை மற்றும் இறையாண்மைக்கு எதிரான அப்பட்டமான விதிமீறல் மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தம் மற்றும் மின்ஸ்க் செயல்முறைகளை நிராகரிக்கும் செயல் எது என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து, தங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் தந்து, உக்ரைன் மக்களுக்கு பிரித்தானியா துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்:
உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுகந்திர பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்து இருப்பதற்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அறிவிப்பு உக்ரைனின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் மற்றும் போரை நிறுத்தும் செயல்பாடுகளை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த செயல் மூலம் ரஷ்யா மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது.