வெறும் 1 டொலர் மட்டுமே! விற்பனைக்கு வந்துள்ள உலகின் மிகவும் மலிவான வீடு
அமெரிக்காவில் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத விலைக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.
1 டொலருக்கு வீடு
அமெரிக்காவின் மிச்சிகனில் 1 டொலர் என்ற மலிவு விலைக்கு 2 படுக்கையறைகள் கொண்ட வீடு சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
டெட்ராய்ட் நகரின் வெளியே சுமார் 30 மைல் தொலைவில் உலகின் மலிவான வீடு என அழைக்கப்படும் இந்த வீடு அமைந்துள்ளது.
Chris Hubel
இந்த வீடு இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு குளியலறை வசதிகள் கொண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனம்
வெளியிட்ட அறிவிப்பு இது தொடர்பாக தங்களுடைய இணையத்தளத்தில் Zillow என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகின் மலிவான வீட்டை அறிமுகப்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வீடு 2022ம் ஆண்டு சுமார் 4 டொலருக்கு விற்கப்பட்டது, ஆனால் தற்போது மிச்சிகனில் உள்ள போண்டியாக் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு 1 டொலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
Chris Hubel
இது வீடு மட்டும் அல்ல, இது ரியல் எஸ்டேட்டின் வாழ்நாள் சாகசத்திற்கான டிக்கெட் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Chris Hubel
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
world’s cheapest home