உலகின் முதல் Space Hotel: இப்போதே முன்பதிவு செய்யலாம்
அமெரிக்க நிறுவனம் ஒன்று, உலகின் முதல் விண்வெளி ஹொட்டலை திறக்க இருக்கிறது.
உலகின் முதல் Space Hotel
அமெரிக்க நிறுவனமான Above Space என்னும் நிறுவனம், Voyager Station மற்றும் Pioneer Station என்னும் இரண்டு விண்வெளி நிலையங்களை நிறுவ இருக்கிறது. அவற்றில் ஒன்றான உலகின் முதல் விண்வெளி ஹொட்டல் என்னும் பெருமையைப் பெற இருக்கும் Pioneer Stationஇல் 28 பேர் தங்கலாம். இந்த விண்வெளி ஹொட்டல், அடுத்த ஆண்டிலிருந்து இயங்க உள்ளது.

Credit: Orbital Assembly
Voyager Stationஇலோ, 400 பேர் தங்கும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விண்வெளி மையம், 2027இலிருந்து இயங்க உள்ளது.
இந்த ஹொட்டல் அறைகளில், ஒரு கட்டில், ஒரு சிறிய மேசையுடன், ஜன்னல் வழியாக பூமியைப் பார்க்கும் வசதியும் இருக்கும்.

Credit: Orbital Assembly
செயற்கை புவியீர்ப்பு விசை
இந்த ஹொட்டல் அறைகளில் பூமியில் இருப்பதுபோலவே உட்காரவும், படுத்திருக்கவும் முடியும் வகையில் செயற்கை புவியீர்ப்பு விசை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

Credit: Orbital Assembly
அதே நேரத்தில், ஹொட்டலிலுள்ள ஒரு பெரிய அறையில் மக்கள் விண்வெளி வீரர்களின் அனுபவத்தைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அங்கு மக்கள் விண்வெளி வீரர்களைப்போலவே அந்தரத்தில் மிதக்கலாம்.

Credit: Orbital Assembly
நான்கு முதல் 18 மணி நேரம் வரை பிடிக்கும் இந்த பயணத்துக்கான செலவு, 55 மில்லியன் டொலர்கள். இப்போதே உங்கள் இடத்துக்காக முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்கிறது Above Space நிறுவனம்.
வீடியோவை காண

Credit: Orbital Assembly

Credit: Orbital Assembly

Credit: The Gateway Foundation

Credit: The Gateway Foundation

Credit: The Gateway Foundation
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |