உலகில் மிகவும் ஆபத்தான நாடுகள் இது தான்! வெளியான 2021-ஆம் ஆண்டின் முழு பட்டியல்
உலகில் ஆபத்தான நாடுகளின் பட்டியலில், தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.
உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் பல சிறப்புகள் உண்டு.
இருப்பினும் சில நாடுகளில் இருக்கும் அரசியல், பயங்கரவாதம், உள்நாட்டு மோதலால் ஏற்படும் உயிரிழப்புகள், கொலை விகிதம் போன்ற 22 விஷயங்களை அடிப்படையாக வைத்து, Global Peace Index நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது மற்றும் பாதுகாப்பானது போன்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்ந்து மோதல் இராணுவமயமாக்கல் உள் மற்றும் வெளிப்புற வன்முறை மோதல்களின் எண்ணிக்கை நாட்டில் இருக்கும் அவநம்பிக்கையின் நிலை அரசியல் நிலைமை பயங்கரவாத செயல்களுக்கு சாத்தியம் கொலைகளின் எண்ணிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவத்திற்கு செய்யும் செலவுகள் போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து, 163 நாடுகளுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், ஒரு நாடு எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் ஆபத்தானது என்பது வெளியிடப்படுகிறது.
உலகில் மிகவும் குறைந்த அமைதி நிலை கொண்ட 13 நாடுகளின் பட்டியல்
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக உள்ளது. 2020 முதல் 2021 வரை ஆப்கானிஸ்தான் இந்த நிலையில் உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு போர் மற்றும் பயங்கரவாதத்தால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வருவதே இதற்கு காரணம்.
ஏமன்
ஏமன் இரண்டாவது ஆபத்தான நாடாக மாறியுள்ளது. ஐநாவின் கூற்றுப்படி, ஏமனில் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி உள்ளது.
இங்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் மோதல் காரணமாக, 4.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 14 மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் கொடிய நோய்களின் வெடிப்பு அபாயத்தில் உள்ளனர்.
சிரியா
உலகின் மூன்றாவது ஆபத்தான நாடாக சிரியா உள்ளது. ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த உள்நாட்டு போர் இதை மிகவும் பாதித்துள்ளது.
இது இரண்டாம் நூற்றாண்டில் நடந்த மிகக் கொடிய போராக பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி 5.7 மில்லியன் மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.
தெற்கு சூடான்
தெற்கு சூடான் நான்காவது மிகவும் ஆபத்தான நாடு ஆகும். தெற்கு சூடானில் தொடர்ந்து மோதல்கள், உள்நாட்டு அமைதியின்மை, கொள்ளை, தாக்குதல்கள், கார் திருடுதல் மற்றும் கடத்தல்கள் உட்பட பரவலான வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
நாட்டின் தலைநகரான ஜூபாவிற்கு வெளியே சட்டம் அல்லது ஒழுங்கின் ஆட்சி இல்லாத காரணத்தினால், பெரும்பாலும் அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சி குழுக்களுக்கும் இடையே ஆயுத மோதல் உள்ளது.
ஈராக்
மிகவும் ஆபத்தான நாடுகளில் ஈராக் மூன்றாவது இடத்திலிருந்து இப்போது ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளது. ஈராக்கில் பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உள் மற்றும் வெளிப்புற மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பொதுமக்களையும் ஈராக் ஆயுதப்படைகளையும் பிடித்து கொன்று வருகிறது. ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் உட்பட பிற மனித உரிமை மீறல்கள் நீடித்து வருகின்றன.
ஈராக்கிற்கு வருகை தரும் அமெரிக்க குடிமக்கள் குறிப்பாக அதிக ஆபத்தில் உள்ளனர்.
மிகக் குறைந்த அமைதி நிலையைக் கொண்ட மற்ற நாடுகளின் பட்டியல்
- சோமாலியா
- காங்கோ
- ஜனநாயக குடியரசு
- லிபியா
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு
- ரஷ்யா
- சூடான்
- வெனிசுலா
- வட கொரியா