உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்: சுவிட்சர்லாந்து எந்த இடத்தில் தெரியுமா?
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி ஐரோப்பிய நாடான பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் மற்றும் அதற்கான காரணம் குறித்து இங்கே காண்போம்.
1. பின்லாந்து
7வது ஆண்டாக தொடர்ச்சியாக பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நாட்டின் இயற்கை அழகு, வலுவான சமூக ஆதரவு அமைப்புகள், குறைந்த ஊழல் மற்றும் ஆரோக்கியமான வேலை, வாழ்க்கை சமநிலை இதற்கு காரணமாக அமைகிறது.
2. டென்மார்க்
இலவச மருத்துவம், மானியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு, கல்வி கட்டணமில்லாத பல்கலைக்கழகங்கள், தாராளமான ஓய்வூதியம் உள்ளிட்ட காரணங்களால் டென்மார்க் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இங்கு சமத்துவம் மற்றும் சமூக நலன் மீதான நாட்டின் முக்கியத்துவம், உயர்மட்ட வாழ்க்கை மக்களுக்கு திருப்தி அளிக்கிறது.
3. ஐஸ்லாந்து
பொருளாதார காரணிகள், சமூக ஆதரவு போன்ற காரணங்களால் இங்கு அதிக அளவில் மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கை திருப்தி மக்களுக்கு கிடைக்கிறது.
இந்நாட்டின் இயற்கை அழகு, அதன் குடிமக்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது. இதன்மூலம் 7.52 மதிப்பெண்களுடன் 3ஆம் இடம் பிடித்துள்ளது.
4. ஸ்வீடன்
ஸ்வீடன் தாராளமான சமூக நலன்கள், குறைந்த ஊழல் மற்றும் நிலையான பொருளாதாரம் ஆகியவற்றை வழங்குகிறது.
இது மக்களின் நல்வாழ்விற்கு பங்களிக்கிறது. இதன்மூலம் 7.39 மதிப்பெண்கள் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
5. இஸ்ரேல்
உலக அளவில் இஸ்ரேல் மகிழ்ச்சியான நாடுகளில் 5வது இடம் பிடித்துள்ளது. போருக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்படி வலுவான பொருளாதாரம், துடிப்பான கலாச்சாரம், ஜனநாயக நிறுவனங்கள் மூலம் இஸ்ரேல் இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
6. நெதர்லாந்து
நெதர்லாந்து இப்பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. வலுவான சமூக ஆதரவு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றுடன் 7.34 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இங்கு மக்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கிறார்கள்.
7. நார்வே
உயர் GDP, வலுவான சமூக ஆதரவு அமைப்புகள், ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவற்றால் நார்வேயின் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
நார்வே அரசு தன் மக்களுக்கு ஆதரவாக கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளில் அதிகம் முதலீடு செய்கிறது.
8. லக்ஸம்பர்க்
8வது இடம் பிடித்துள்ள லக்ஸம்பர்க் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளது.
இதன் குடிமக்களுக்கு நிலையான, வளமான சூழலை வழங்குகிறது. லக்ஸம்பர்க் அதன் பன்மொழி கலாச்சாரம் மற்றும் உயர்தர வாழ்க்கைக்கு பெயர் பெற்றது.
9. சுவிட்சர்லாந்து
சுவிஸ் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 9வது இடம்பிடித்துள்ளது. இங்கு வலுவான பொருளாதாரம், அதிக வருமானம், குறைந்த ஊழல் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் உள்ளது.
இந்நாட்டு மக்கள் சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் உயர்தர வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்றனர்.
10. அவுஸ்திரேலியா
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஐரோப்பிய நாடு அல்லாத தேசம் அவுஸ்திரேலியா.
இங்கும் வலுவான பொருளாதாரம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் உயர்தர வாழ்க்கை மக்களின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கிறது.
மொத்தம் 143 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியா 126வது இடத்தில் உள்ளது. இலங்கை 128வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |