உலகின் டாப் பணக்காரர்களின் புதிய பட்டியல்: முதலிடத்தில் யார்?
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உலகின் டாப் பணக்காரர்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
எலோன் மஸ்க்
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal), 50 பில்லியன் டொலர்களுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட உலகப் பணக்காரர்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
இது உலக பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களை பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பம், வணிகம் என பல்வேறு துறைகளில் ஜாம்பவான்களாக உள்ளவர்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 419.4 பில்லியன் டொலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சென்டி-பில்லியனர் என்று அழைக்கப்படுகிறார்.

அரசு குடியிருப்பில் வளர்ந்தவர்... ரூ 8,000 பணத்துடன் வெளிநாடு பயணம்: இன்று மலைக்கவைக்கும் சொத்து மதிப்பு
முகேஷ் அம்பானி
அமேசான் நிறுவர் ஜெஃப் பெஸோஸ் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், LVMH தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 3வது இடத்திலும் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் லாரன்ஸ் எலிசன், மார்க் ஜூக்கர்பெர்க், செர்ஜி பிரின், ஸ்டீவன் பால்மர், வாரன் பஃபெட் மற்றும் ஜேம்ஸ் வால்டன் ஆகியோர் உள்ளனர்.
இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி 17வது இடத்தையும், கௌதம் அதானி 21வது இடத்தையும் பிடித்துள்ளனர். எனினும் இந்திய அளவில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |