15 வயதில் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம்: யார் இந்த லாரண்ட் சைமன்ஸ்?
இளம் வயதில் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று ஒட்டுமொத்த அறிவியல் உலகையும் லாரண்ட் சைமன்ஸ் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
யார் இந்த லாரண்ட் சைமன்ஸ்?
2009ம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்த குழந்தை மேதையாக கருதப்படும் லாரண்ட் சைமன்ஸின் கல்வி பயணம் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
மிக சிறிய வயதில் அதாவது 8 வயதில் லாரண்ட் சைமன்ஸ் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.

பின்னர் 11 வயதில் இயற்பியலில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார், 3 ஆண்டுகளில் நிறைவடையும் இளங்கலை பட்டத்தை லாரண்ட் சைமன்ஸ் வெறும் 18 மாதங்களில் சிறப்பு தகுதிகளுடன் நிறைவு செய்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய 12வது வயதிலேயே குவாண்டம் இயற்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்று அசத்தியுள்ளார்.
2025ம் ஆண்டு தன்னுடைய 15வது வயதில் லாரண்ட் சைமன்ஸ், ஆண்டர்வெர்ப் பல்கலைக்கழகத்தில்(University of Antwerp) குவாண்டம் இயற்பியலில் தனது ஆய்வுக் கட்டுரையை வெற்றிகரமாக சமர்பித்து அதிகாரப்பூர்வமாக முனைவர் பட்டம்(PhD) பெற்றுள்ளார்.
“Bose polarons in superfluids and super solids” என்ற தலைப்பில் லாரண்ட் சைமன்ஸின் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை குவாண்டம் அறிவியலின் சிக்கலான கூறுகளை ஆராய்கிறது.

எதிர்கால திட்டம்
குவாண்டம் ஒளியிடலில்(Quantum Optics) பயிற்சி பெற்ற லாரன்ட் சைமன்ஸுக்கு, இயற்பியலுக்கும், மருத்துவத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அவரது முனைவர் பட்ட ஆய்வுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கினாலும் அதை ஏற்க மறுத்து, சூப்பர்-மனிதர்களை உருவாக்குவது மற்றும் ஆயுட்காலத்தை அதிகரிப்பது ஆகியவை அவரது லட்சிய இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |