உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியல் - முதலிடத்தில் எந்த நிறுவனம்?
உலகளவில் வேலை, சுற்றுலா போன்ற காரணங்களுக்காக விமான பயணம் செய்வோரின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேபோல், சமீபத்தில் விமானங்கள் விபத்தை சந்திப்பது, அவசர தரையிறக்கம் போன்ற காரணங்ளால் பயணிகள் பாதுகாப்பான விமான நிறுவனங்களை தேடுகின்றனர்.

Credit : Getty
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியலை AirlineRatings.com என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பான விமான நிறுவனங்கள்
இதன்படி, விமான விபத்து வரலாறு, விமானத்தின் வயது, விமானியின் பயிற்சி அனுபவம் மற்றும் விமான ஊழியர் குழுவின் திறன், சுயாதீன பாதுகாப்பு தணிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில், 320க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களை மதிப்பீடு செய்து இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ்
இதில், விபத்து இல்லாத சாதனை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ்(etihad airways) உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஹாங்காங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் கேத்தே பசிபிக் (Cathay Pacific) 2வது இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் குவாண்டாஸ் 3வது இடத்தில் உள்ளது.

இதனையடுத்து, கத்தார் ஏர்வேஸ் 4வது இடத்திலும், எமிரேட்ஸ் 5வது இடத்திலும், ஏர் நியூசிலாந்து 6வது இடத்திலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 7வது இடத்திலும், தைவானின் EVA Air 8 வது இடத்திலும், விர்ஜின் ஆஸ்திரேலியா 9வது இடத்திலும், கொரியன் ஏர் 10வது இடத்திலும் உள்ளது.
இதே போல் பாதுகாப்பான குறைந்த விலை விமான நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஹாங்காங்கின் HK Express தொடர்ந்து 2 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. ஜெட்ஸ்டார் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், ஸ்கூட்(Scoot) 3வது இடத்திலும் உள்ளது.

இதனை தொடர்ந்து, ஃப்ளை துபாய் 4 வது இடத்திலும், ஈஸிஜெட் குழு 5 வது இடத்திலும், தென்மேற்கு ஏர்லைன்ஸ் 6வது இடத்திலும், ஏர்பால்டிக் 7வது இடத்திலும், வியட்ஜெட் ஏர் 8வது இடத்திலும், விஸ் ஏர் குழுமம் 9வது இடத்திலும், ஏர் ஆசியா குழுமம் 10வது இடத்திலும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |