உலகின் வலிமையான பெண்ணின் பட்டம் பறிப்பு
உலகின் வலிமையான பெண் என பட்டம் பெற்றவரின் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஆர்லிங்டனில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான உலகின் வலிமையான பெண்ணுக்கான போட்டியில் அமெரிக்கரான ஜேமி புக்கர் (Jammie Booker, 28) என்னும் பெண் வெற்றி பெற்றார்.

ஆனால், ஜேமி உண்மையில் பெண்ணே அல்ல, திருநங்கை என பின்னர் தெரியவந்துள்ளது.
ஆகவே, ஜேமியின் பட்டத்தைப் பறித்துள்ள விளையாட்டுப் போட்டி கமிட்டி, அவரை தகுதிநீக்கமும் செய்துள்ளது.
வெற்றி பெற்றபின் கமிட்டி உறுப்பினர்கள் ஜேமியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவே இல்லையாம்.

போட்டியில் பிரித்தானியரான ஆண்ட்ரியா தாம்ஸன் (Andrea Thompson) என்பவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜேமியின் பட்டம் பறிக்கப்படுவதற்கு முன்பே, ஆண்ட்ரியாவின் பயிற்சியாளர் லாரன்ஸ் (Laurence Shahlaei) மற்றும் ஏற்கனவே மூன்று முறை உலகின் வலிமையான பெண் பட்டம் வென்றவரான ரெபேக்கா ( Rebecca Roberts) ஆகியோர், ஆண்ட்ரியாதான் உண்மையான வெற்றியாளர் என அவருக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |