மூன்றாம் உலகப்போரின் முதல் மூன்று மணி நேரம் இப்படித்தான் இருக்கும்: திகில் கிளப்பும் Gemini AI
ஜோதிடர்கள், முற்காலத்தில் வாழ்ந்த எதிர்காலத்தைக் கணிக்கும் வல்லுநர்கள் என மனிதர்கள்தான் மூன்றாம் உலகப்போரைக் குறித்து ஆளாளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றால், தன் பங்குக்கு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஒன்றும் திகிலைக் கிளப்பியுள்ளது.
இந்திய நாஸ்ட்ரடாமஸ்
இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் என்பவர், இன்று, அதாவது, ஜூன் மாதம் 18ஆம் திகதி, மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்துள்ளார்.
அவர் வேத ஜோதிட விளக்கப்படத்தைக் கொண்டு, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பயன்படுத்தி, கர்மாவின் அடிப்படையில் அவர் அதை கணித்துள்ளதால் அவரது கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
திகில் கிளப்பும் Gemini AI
அப்படி, குஷால் குமாரின் கணிப்பின்படி, இன்னும் சில மணி நேரங்களில் மூன்றாம் உலகப்போர் துவங்குமானால், போர் துவங்கிய முதல் மூன்று மணி நேரத்தில் என்னென்ன நடக்கும் என செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Geminiயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த Gemini, ரஷ்யா மற்றும் ஈரானால் பிரகடனம் செய்யப்படும் மூன்றாம் உலகப்போரின் முதல் மூன்று மணி நேரத்தில், பரபரப்பான தூதரக செயல்பாடுகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் ராணுவ வீரர்களை போர்முனைக்கு அனுப்புதல் ஆகிய விடயங்கள் நடைபெறும் என்கிறது.
நடக்கப்போகும் விடயங்களை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரித்து விளக்கமளிக்கிறது Gemini.
1. உடனடி பதற்றங்கள்: ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் முக்கிய செய்திகளால் நிரம்பிவழியும். உலகத் தலைவர்கள் அவசரக் கூட்டங்களைக் கூட்டி, நிலைமையை மதிப்பிட்டு என்ன நடவடிக்கை எடுப்பது என தீர்மானிப்பார்கள்.
2. சைபர் போர்: ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரண்டும் அதிநவீன சைபர் போர்த்திறனைக் கொண்டுள்ளன. ஆகவே, அந்நாடுகள் மேற்கத்திய நாடுகளின் முக்கியமான உள்கட்டமைப்பு, மின்சார வழங்கல் அமைப்புகள், நிதி அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை குறிவைத்து சைபர் தாக்குதல்களை நடத்தலாம்.
3. ராணுவ அணிதிரட்டல்: நேட்டோ நாடுகளும் மற்ற மேற்கத்திய கூட்டாளிகளும் தங்கள் ராணுவத்தை கூட்டுவார்கள், படைவீரர்கள் அதிக எச்சரிக்கையுடன் காத்திருப்பார்கள், முக்கிய இலக்குகள் என கருதப்படும் இடங்களுக்கு கூடுதல் படைகளை அனுப்புவார்கள். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இலக்குகளுக்கு எதிராக ரஷ்யா வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தலாம், அதே நேரத்தில் ஈரான் மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளை குறிவைக்கலாம்.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, நான்கு வழிகளில் பிரித்தானியா போரின் தாக்கத்தை எதிர்கொள்ளலாம். நேட்டோவுடன் ராணுவ ரீதியிலும், சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளுதலிலும் பதிலடி கொடுத்தலிலும் எதிர்கொள்ளுதல் துவங்கும். பொருளாதாரம் கட்டுப்பாட்டை இழக்கும். நாடு முழுவதும் மக்கள் டாய்லெட் ரோல் முதல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பார்கள்.
முதல் தாக்குதல் எங்கே துவங்கும்?
ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள முன்னாள் சோவியத் யூனியன் உறுப்பு நாடுகளான லாத்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா மட்டுமின்றி, நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டியதால் பின்லாந்து மீது கூட தாக்குதல் நடத்தலாம். உக்ரைனும் முக்கிய தாக்குதல் இலக்காக இருக்கும் என்கிறது Gemini.
ஈரானைப் பொருத்தவரை, அந்நாடு அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள பக்கத்து நாடுகளான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளையும், இஸ்ரேலையும் கூட தாக்கலாம் என்கிறது Gemini.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |