உலகின் இளம் வயது பெரும் கோடீஸ்வரர்கள்... மொத்தம் 21 பேர்களில் யாருக்கு முதலிடம்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் இளம் வயது பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மொத்தம் 21 பேர்கள் இடம்பெற்றுள்ளனர்.
குடும்ப சொத்து
உலகின் இளம் வயது பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 30 வயதுக்கு உட்பட்ட 21 பேர்கள் இடம்பெற்றுள்ளனர். 19 வயதேன Johannes von Baumbach என்பவரே உலகின் இளம் வயது பெரும் கோடீஸ்வரராக தெரிவாகியுள்ளார்.
இவர் ஜேர்மனியின் Boehringer Ingelheim நிறுவனத்தின் வாரிசாவார். இது உலகின் மிகப்பெரிய தனியாருக்கு சொந்தமான மருந்து நிறுவனமாகும். இவரும் இவரது மூன்று சகோதரர்களும் ஐரோப்பாவின் பெரும் கோடீஸ்வர இளம் வாரிசுகளாக அறியப்படுகின்றனர்.
இவர்களின் சொத்து மதிப்பு தலா 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிரது. ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவாகியுள்ள பெரும்பாலான இளம் கோடீஸ்வரர்கள் தங்கள் குடும்ப சொத்துக்கள் காரணமாகவே, கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இத்தாலியின் 20 வயதேயான Clemente Del Vecchio என்பவர் EssilorLuxottica நிறுவனத்தின் வாரிசாவாவார். பிரேசிலின் 20 வயதேயான Lívia Voigt de Assis என்பவர் WEG குழும நிறுவனங்களின் வாரிசாவார்.
கடும் உழைப்பால்
தென் கொரியாவின் 21 வயது Kim Jung-youn என்பவர் NXC நிறுவனத்தின் வாரிசாவார். ஆனால் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது Ed Craven தாமே உருவாக்கிய நிறுவனத்தால், கடும் உழைப்பால் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ அடிப்படையிலான ஒன்லைன் கேசினோ நிறுவனமான Stake.com இவருக்கு சொந்தமானதாகும். இன்னொருவர் அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான Alexandr Wang.
இவர் Scale AI என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர். பிரான்சில் அமைந்துள்ள Dassault நிறுவனத்தின் வாரிசான 24 வயது Remi Dassault என்பவரும் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இவர்களுடன் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரியின் மகன்கள் ஜஹான் மற்றும் ஃபிரோஸ் மிஸ்திரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |