80 ஆண்டுகளாக விலகாத மர்மம்! 5 வயதிலேயே ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி.. எப்படி சாத்தியம்?
தென் அமெரிக்காவில் 5 வயதான பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவின் டிக்ராப்போவில் 1933 செப்டம்பர் 27ஆம் திகதி பிறந்தவர் லீனா. சில்வர் ஸ்மித் மற்றும் விக்டோரியா லோசியா தம்பதியரிருக்கு பிறந்த 9 குழந்தைகளில் ஒருவர் ஆவார்.
5 வயது சிறுமியான லீனாவின் வயிறு திடீரென பெரிதாகிக் கொண்டே வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் பிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வயிற்றில் பெரிய கட்டி வளர்ந்து வருவதாக கருதிய பெற்றோருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. லீனாவை சோதித்த மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சிசேரியன் பிரிவில் அனுமதிக்கப்பட்ட லீனா 1939ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் 6 பவுண்ட் எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அப்போது அவர் 5 வயது 7 மாதங்கள் 21 நாட்களே ஆகும். 5 வயதேயான சிறுமி குழந்தை பெற்றெடுத்தது தொடர்பான செய்தி சர்வதேச மருத்துவத்துறையையே அதிர்ச்சியை ஆழ்த்தியது.
பின்னர் மருத்துவ வல்லுநர்கள் குழு நடத்திய விசாரணையில் லீனாவிற்கு 3 வயது முதலே மாதவிலக்கு ஏற்பட்டது தெரியவந்தது. லீனா 5 வயதிலேயே முழு வளர்ச்சி அடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
லீனா தந்து 40 வயதில் காலமானார். ஆனால் அவர் கருவுறுவதற்கு காரணமானவர் யார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது.