வாயை மூடு! கால்பந்து உலக கோப்பை போட்டியில் தோற்ற கத்தார்... ரசிகர்கள் வாக்குவாதம் செய்த வீடியோ
உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியின் போது மைதானத்தில் இரு தரப்பு ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
ஈக்குவேடார் அணியிடம் தோற்ற கட்டார்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. தொடக்க நாளான நேற்று 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஈக்குவேடார் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. அந்த அணிக்கு ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்னர் வலென்சியா கோலாக்கினார்.
— Out Of Context Football (@nocontextfooty) November 20, 2022
ரசிகர்கள் இடையே வாக்குவாதம்
இறுதிவரை கத்தார் அணி கோல் எதுவும் அடிக்காததால் ஈகுவடார் அணி முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்களின் அடிப்படையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஈகுவடார் அணி தனது முதல் கோலை அடித்த போது இரண்டு குழந்தைகளுடன் மைதானத்தின் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்திருந்த அந்த அணியின் ரசிகர் ஒருவர் எழுந்து நின்று கையை ஆட்டி கத்தியபடி மகிழ்ச்சியை கொண்டாடினார். ஆனால் அவரை சுற்றி முழுவதும் அரபு ரசிகர்கள் தான் இருந்தனர்.
இதையடுத்து ஒரு ரசிகர், ஈகுவடார் ரசிகரை பார்த்து ’வாயை மூடு’ என கடுப்பில் கத்தினார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனால் போட்டிக்கு பிறகு இருவரும் நட்பாகி மற்றொரு வீடியோவை வெளியிட்டனர். அதில் விளையாட்டின் மீதான பேரார்வம் சில நேரங்களில் நம்மை வருத்தப்படுத்துகிறது.
ஆனால் நாங்கள் விளையாட்டுக்காக ஒன்றாக வருகிறோம், எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நட்பாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
The Ecuador and Qatar fan who went viral cleared their differences at half time #FIFAWorldCup pic.twitter.com/moKUflvlNo
— FIFA World Cup 2022 (@2022_QatarWC) November 20, 2022