கால்பந்து உலக கோப்பையில் இதுவே முதல் முறை…கத்தார் உருவாக்கியுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன?
கத்தார் நடத்தும் 2022ம் ஆண்டு கால்பந்து உலக கோப்பை தொடரில் கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகளுக்கு இடையே முதல் போட்டி இன்று இரவு தொடங்க உள்ளது.
2022ம் ஆண்டின் கால்பந்து உலக கோப்பை தொடரில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இருப்பினும் இந்த உலக கோப்பை கால்பந்து தொடர், பல பழைய மரபுகளை உடைத்து புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உலக கோப்பையில் முதல் முறை
உலக கோப்பை கால்பந்து தொடரை முதன் முறையாக நடத்தும் சிறிய நாடு கத்தார்(26 லட்சம் மக்கள் தொகை) மற்றும் உலக கோப்பை தொடரை முதல் முறையாக நடத்தும் இஸ்லாமிய நாடும் கத்தார் தான்.
ஐரோப்பிய பிராந்தியங்களில் குளிர்காலம் தொடங்கும் போது நடத்தப்படும் முதல் கால்பந்து உலக கோப்பை தொடர் இது.
FIFA World Cup Qatar 2022 Fireworks Opening
— Tansu YEĞEN (@TansuYegen) November 18, 2022
pic.twitter.com/jRMd18vwKx
இதுவரை உலக கோப்பையில் விளையாடாமலே தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்ற முதல் நாடு என்ற பெருமையை கத்தார் பெற்றுள்ளது.
உலக கோப்பை தொடர்களிலேயே மிகவும் குறுகிய காலம் நடக்கும் தொடர் இது தான்(மொத்தம் 29 நாட்கள்)
பிரித்தானிய மகாராணி இறப்புக்கு பின் நடைபெறும் முதல் தொடர் இது.
ஆண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நடுவர்கள் பணியாற்ற நியமிக்கப்பட்டு இருப்பதும் இந்த தொடரில் தான்.
??? ONLY ONE DAY LEFT UNTIL THE FIFA WORLD CUP! #Qatar2022 #FIFAWorldCup pic.twitter.com/etZNo0Fg66
— Road to 2022 (@roadto2022en) November 19, 2022
உலக கோப்பை தொடரை நடத்த ஒரு நாடு இவ்வளவு செலவிட்டிருப்பதும் இதுவே முதல் முறை, சுமார் 17.93 லட்சம் கோடியை கத்தார் இந்த தொடருக்காக செலவிட்டுள்ளது.
விமர்சனங்களுக்கு பதிலடி
கால்பந்து போட்டியின் தொடக்கத்தை குறிப்பதற்கான செய்தி மாநாட்டில் பேசிய கால்பந்து சர்வதேச நிர்வாகக் குழுவின் ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ, கத்தார் கால்பந்து போட்டிகள் குறித்து விமர்சிக்கும் விமர்சகர்கள், மக்களுக்கு தார்மீக பாடங்களை கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 3,000 ஆண்டுகளில் ஐரோப்பியர்களாகிய நாங்கள் உலகம் முழுவதும் என்ன செய்து வருகிறோம் என்பதற்காக, அடுத்த 3,000 ஆண்டுகளில் மக்களுக்கு தார்மீக பாடங்களைக் கொடுக்கத் தொடங்குவதற்கு முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.