உலகின் 2-வது பாரிய வைரத்தை கண்டுபிடித்த கனேடிய நிறுவனம்!
உலகின் இரண்டாவது பாரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த Lucara Diamond Corp நிறுவனத்தின் கெய்ரோ சுரங்கத்தில் 2492 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1905-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3106 காரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பாரிய வைரம் இதுவாகும்.
போட்ஸ்வானா தலைநகர் கபரோனில் இருந்து 500 கி.மீ தொலைவில் Cairo சுரங்கம் உள்ளது.
முன்னதாக 2019-ஆம் ஆண்டில், இதே சுரங்கத்தில் 1758 காரட் செவாலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பிரெஞ்சு பேஷன் நிறுவனமான Louis Vuitton வாங்கியது. ஆனால், அதன் விலையை வெளியிடவில்லை.
முன்னதாக 2017-ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 காரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது, இதை ஒரு பிரிட்டிஷ் நகைக்கடைக்காரர் ரூ.444 கோடிக்கு வாங்கினார்.
போட்ஸ்வானா உலகின் மிகப்பாரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். உலகின் வைரத்தில் 20% இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2,492-carat diamond, world’s second-largest diamond, Botswana diamond