பஞ்சாப்,உபியை தொடர்ந்து சுற்றுசூழல் பாதிப்பில் தமிழகத்திற்கு இத்தனையாவது இடமா?
பஞ்சாப், உத்திர பிரதேசம்,ராஜஸ்தான், பீகார் மாநிலங்களை தொடர்ந்து கட்டிடங்களின் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு உள்ளாகும் உலகின் முதல் 50 பிராந்தியங்களின் பட்டியலை XDI என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் 36 வது இடம்
XDI என்ற இந்த அமைப்பு இயற்பியல் காலநிலை இடப்பகுப்பாய்வில் உலக அளவில் தலைமை நிறுவனமாக பார்க்கப்படுகிறது.
கட்டிடங்கள், வீடுகள், சாலைகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளால் உண்டாகும் காலநிலை மாற்றத்தை பற்றி பகுப்பாய்வு செய்துள்ளது.
இந்திய அளவில் அத்தரவரிசையில் உள்ள 9 மாநிலங்களில் பீகார் 22 வது இடத்திலும், உத்திர பிரதேசம் 25 வது இடத்திலும், அசாம் 28, ராஜஸ்தான் 32, தமிழ்நாடு 36 வது இடத்திலும், மகாராஷ்ட்ரா 38, கேரளா 50 வயது இடத்திலும் உள்ளன.
சீனாவிற்கு முதலிடம்
சீனாவும், அமெரிக்காவும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவின் இரண்டு பெரிய மாநிலங்களான ஜியாஞ்சு மற்றும் ஷான் டாங் போன்ற மாநிலங்கள் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன.
அதே போல் அமெரிக்காவின் புளோரிடா என்ற மாநிலம் அதற்கடுத்தபடியாக தர வரிசையில் உள்ளன. இதனை தொடர்ந்து கலிபோர்னியா மற்றும் டெக்சஸ் உள்ளன.
கட்டமைப்புகளால் ஆபத்து
உலக அளவில் 2050 ஆம் ஆண்டில் அதிக பாதிப்புக்கு உள்ளாக கூட நாடுகளில் சீனா 80%, அதனை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உள்ளன.
XDI யின் அறிக்கைப்படி தற்போது வெளியாகியுள்ள காலநிலை மாற்றத்திற்கான கணக்கெடுப்பு இதற்கு முன்பு கணக்கெடுப்பு நடத்தியதை விட மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.