60 ஆண்டுகளாக குளிப்பதை தவிர்த்த 'உலகின் அழுக்கு மனிதர்' மரணம்
ஆறு தசாப்தங்களாக குளிப்பதைத் தவிர்த்த 'உலகின் அழுக்கு மனிதர்' 94 வயதில் இறந்தார்.
குளித்தால் நோய்வாய்ப்படுவோம் என்று அஞ்சியதாக கூறப்படுகிறது.
பல தசாப்தங்களாக குளிக்காமல் இருந்ததற்காக "உலகின் அழுக்கான மனிதர்" என்று செல்லப்பெயர் பெற்ற ஈரானிய நபர் தனது 94 வயதில் இறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக குளிக்காமல் தனிமையில் இருந்த அமு ஹாஜி (Amou Haji), ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானதாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
AFP via Getty Images
ஹாஜி தனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் குளிப்பதை தவிர்த்தார் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக, கிராமவாசிகள் அவரை கழுவுவதற்காக குளியலறைக்கு அழைத்துச் சென்றனர் என்று IRNA தெரிவித்துள்ளது.
ஈரானிய ஊடகங்களின்படி, 2013-ல் அவரது வாழ்க்கையைப் பற்றி "The Strange Life of Amou Haji" என்ற தலைப்பில் ஒரு சிறு ஆவணப்படம் எடுக்கப்பட்டது குறிப்பியத்தக்கது.
AFP via Getty Images
AFP via Getty Images
AFP via Getty Images