உலகின் முதல் CNG Scooter-ஐ அறிமுகப்படுத்திய TVS., 84 கிமீ மைலேஜ்!
டெல்லியில் நடைபெற்றுவரும் Auto Expo 2025-ல் உலகின் முதல் CNG Scooter-ஐ TVS அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது Jupiter CNG ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் காட்சிப்படுத்தியுள்ளது.
ஜூபிடர் சிஎன்ஜி உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்க முடியும்.
இந்த ஸ்கூட்டர் ஒரு கிலோ சிஎன்ஜியில் 84 கிமீ வரை செல்லும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் இந்த ஸ்கூட்டர் 226 கிமீ தூரம் வரை செல்லும்.
அதன் இருக்கைக்கு அடியில் ஒரு சிஎன்ஜி சிலிண்டர் நிறுவப்பட்டுள்ளது, இது 1.4 கிலோ எரிவாயுவை வைத்திருக்கும். மேலும் இந்த ஸ்கூட்டரில் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.
ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டரில் semi-digital analog display, USB charger மற்றும் start/stop தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் கிடைக்கும்.
இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 125cc single-cylinder engine அதிகபட்சமாக 7.2 பிஎச்பி பவரையும், 9.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் மணிக்கு 80.5 கிமீ வேகம் வரை செல்லும். இந்த சிஎன்ஜி ஸ்கூட்டரின் அறிமுக திகதி மற்றும் விலை இன்னும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.
சிஎன்ஜி மாடலின் விலை, பெட்ரோல் மூலம் இயங்கும் ஜூபிடர் 125 பைக்கின் விலைக்கு சமமாக இருக்கலாம்.
இப்போதுள்ள ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் விலை ரூ.79,540 முதல் ரூ.90,721 வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
TVS Motor Company, world’s first CNG-powered scooter, Jupiter CNG, Bharat Mobility Expo 2025, TVS Jupiter CNG scooter