உலகின் முதல் பறக்கும் பைக்: வாகன பிரியர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய வைரல் வீடியோ!
AERQINS டெக்னாலஜிஸ் வடிவமைத்து இருக்கும் உலகின் முதல் பறக்கும் பைக்.
62 மைல் வேகத்தில் 40 நிமிடம் வரை பறக்கும் சக்தி கொண்டது எனத் தகவல்.
உலகின் முதல் பறக்கும் வாகனத்தை வடிவமைத்து AERQINS டெக்னாலஜிஸ் என்ற ஜப்பானிய ஸ்டார்ட்அப் நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ஆங்கில தொடரான ஸ்டார் வார்ஸில் பார்த்த பறக்கும் பைக் வாகனத்தை தற்போது நிஜத்தில் இணையத்தில் பார்த்த வாகன ஆர்வலர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
ஜப்பானிய ஸ்டார்ட்ஆப் நிறுவனமான AERQINS டெக்னாலஜிஸ், சமீபத்தில் தயாரித்த ஹோவர் பைக்-கை அமெரிக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
This is the world's first flying bike. The XTURISMO hoverbike is capable of flying for 40 minutes and can reach speeds of up to 62 mph pic.twitter.com/ZPZSHJsmZm
— Reuters (@Reuters) September 16, 2022
இது தொடர்பாக ஆட்டோ ஷோவின் இணைத் தலைவரான தாட் சோட், எனக்கு 15 வயதாகிவிட்டதாக உணர்கிறேன், இது அருமை! நிச்சயமாக, உங்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கிறது, ஆனால் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், மேலும் சிறு குழந்தையைப் போல் உணர்கிறேன் என தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒருவர் பைக் ஒன்றை நடுவானில் இயக்குவதை பார்க்க முடிகிறது, அத்துடன் ஹோவர்பைக்( hoverbike) கவனமாக தரையில் தரையிறக்கப்பட்டது மற்றும் உலகின் முதல் பறக்கும் பைக்கின் அம்சங்களை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.
XTURISMO ஹோவர்பைக் அதிகபட்சமாக மணிக்கு 62 மைல் வேகத்தில் 40 நிமிடங்கள் வரை பறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இத்தாலியில் ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த கனமழை: 9 பேர் பலி!
ஏற்கனவே ஜப்பானில் விற்பனையில் உள்ள இந்த பைக் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது , இதன் விலை $777,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.