ரொக்கெட் வேகத்தில் பெருகும் கோடீஸ்வரர்களின் செல்வம்., உலகின் முதல் Trillionaire கணிப்பு
உலகின் முதல் Trillionaire யார்.? அதாவது உலகில் 1 லட்சம் கோடி அமெரிக்க டொலர் பணத்தை சம்பாதிக்கப்போகும் நபர் யார் என கணிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் ஜனவரி 15ம் திகதி தொடங்கியது.
இந்த கூட்டத்தில், ஆக்ஸ்பாம் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், 2020ஆம் ஆண்டிலிருந்து உலகின் ஐந்து பணக்காரர்களின் நிகர மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த பணக்காரர்களில் Elon Musk, Bernard Arnault, Jeff Bezos, Larry Ellison மற்றும் Mark Zuckerberg ஆகியோர் அடங்குவர்.
இந்த கோடீஸ்வரர்கள் 2020-ல் இருந்ததை விட இன்று 3.3 டிரில்லியன் டொலர் பணக்காரர்களாக உள்ளனர்.
உலகின் இந்த ஐந்து கோடீஸ்வரர்கள் ஒவ்வொரு மணி நேரமும் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதாவது இலங்கை பணமதிப்பின்படி சுமார் 449 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
உலகின் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 43 சதவீத செல்வம் உள்ளது.
10 ஆண்டுகளில் முதல் Trillionaire
உலகப் பணக்காரர்களின் செல்வம் இந்த வேகத்தில் அதிகரித்துக் கொண்டே போனால், அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் தனது முதல் Trillionaire (1,000,000,000,000 USD) பெறும் என்று Oxfam International கணித்துள்ளது.
அதேநேரம், இந்த உலகில் வறுமையை ஒழிக்க 230 ஆண்டுகள் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
முதல் டிரில்லியனர் யார்?
லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வம் கொண்ட ஒரு கோடீஸ்வரரை உலகம் விரைவில் பார்க்க முடியும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இருப்பினும், அத்தகைய சூழ்நிலையில் யார் உலகின் முதல் டிரில்லியனர் ஆக முடியும் என்ற கேள்வி எழுகிறது?
இதில் எலோன் மஸ்க், வாரன் பஃபெட், பெர்னால்ட் அர்னவ் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற பெயர்கள் அடங்கும்.
தற்போதைய சூழலை வைத்து கணிக்கும்போது, முதல் டிரில்லியனர் என்ற சாதனையை இவர்களில் ஒருவர் தான் செய்யப்போகிறார்கள்.
முதலிடத்தில் எலோன் மஸ்க்
கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எலோன் மஸ்க். ப்ளூம்பெர்க்கின் சமீபத்திய அறிக்கையில், பில்லியனர்கள் தரவரிசையில் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். பெர்னால்ட் அர்னால்ட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
World’s first trillionaire in next 10 years, Oxfam International, Elon Musk, Bernard Arnault, Jeff Bezos, Larry Ellison, Mark Zuckerberg, Billionaire List, Millionaire, Trillionaire