உலகின் மகிழ்ச்சியான நாடு எது? வெளியான ஆச்சரியமான பட்டியல்
ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததன்முலம் ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுயது.
இன்று வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அட்டவணையில் லெபனான், வெனிசுலா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன.
பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள லெபனான், ஜிம்பாப்வேக்குக் கீழே 146 நாடுகளின் குறியீட்டில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்திற்குச் சரிந்தது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், ஏற்கனவே அட்டவணையில் கீழே உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து அதன் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்துள்ளது. இங்கு இந்த குளிர்காலத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு உதவி செய்யாவிட்டால் பசியால் இறக்க நேரிடும் என ஐ.நா. ஏஜென்சியான யுனிசெஃப் மதிப்பிடுகிறது.
தொடர்ந்து 10-வது ஆண்டாக வெளியிடப்படும் இந்த உலக மகிழ்ச்சி அறிக்கை, மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பற்றிய சொந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும், பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது மூன்று வருட காலப்பகுதியில் சராசரியான தரவுகளின் அடிப்படையில் பூஜ்ஜியத்திலிருந்து பத்து (0-10) வரையிலான மகிழ்ச்சியின் மதிப்பை வழங்குகிறது. இந்த சமீபத்திய பதிப்பு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் முதலிடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பின்லாந்துக்குப் பின் டென்மார்க் இரண்டாவது, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.
அமெரிக்கா மூன்று இடங்கள் உயர்ந்து 16-வது இடத்தைப் பிடித்தது, பிரித்தானியாவுக்கு 17-வது இடம், அதே நேரத்தில் பிரான்ஸ் 20-வது இடத்திற்கு உயர்ந்தது.
இந்த பட்டியலில் இலங்கை 126-ஆம் இடத்திலும், இந்தியா 136-ஆம் இடத்திலும் உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் Gallup கருத்துக் கணிப்புகளின் (Gallup polls) அடிப்படையில் தனிப்பட்ட நல்வாழ்வு உணர்வுடன், மகிழ்ச்சியின் மதிப்பெண் GDP, சமூக ஆதரவு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஊழல் அளவுகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.