உலகிலேயே ஆரோக்கியமான உணவு இதுதான்... புற்றுநோய் அபாயத்தையும் குறைக்குமாம்
கிராமம் ஒன்றில் வாழும் 100 வயது முதியவர்கள் உண்ணும் காலை உணவு ஒன்றுதான், உலகிலேயே ஆரோக்கியமான உணவு என்கிறார் ஆய்வாளர் ஒருவர்.
உலகிலேயே ஆரோக்கியமான உணவு இதுதான்
ஒரு நாளில் நாம் உண்ணும் உணவில், காலை உணவுதான் மிகவும் முக்கியமான உணவு என அழைக்கப்படுகிறது.
அப்படி, Costa Rica நாட்டிலுள்ள Nicoya என்னும் கிராமத்தில், காலை உணவாக உண்ணும் ஒரு உணவுதான் உலகிலேயே ஆரோக்கியமான உணவு என்கிறார் 20 ஆண்டுகளாக உணவு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் Dan Buettner என்னும் ஆய்வாளர்.
அந்த உணவுதான் அந்த கிராமத்திலுள்ளவர்களை 100 வயதுவரை ஆரோக்கியமாக வாழ உதவுவதாக நம்பப்படுகிறது.
அத்துடன், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், அந்த உணவு புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும் என நம்பப்படுகிறது.
அது என்ன உணவு?
மசாலா சேர்க்கப்பட்ட கருப்பு பீன்ஸ் (black beans), cornmeal tortillas, வெங்காயம், சிவப்புக் குடைமிளகாய், உள்ளூர் மூலிகைகள் சில மற்றும் நீளமான வெள்ளை அரிசி கலந்த உணவுதான் அது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், வைட்டமின் B, அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட்கள் என அனைத்து சத்துக்களும் இந்த உணவில் உள்ளன.
இந்த உணவின் விலையும் அதிகமில்லை. வெறும் 4.23 டொலர்கள்தான் என்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |