பயணத்தை தொடங்கியது உலகின் மிகப்பெரிய கப்பல்: இயற்கை ஆர்வலர் வெளிப்படுத்தும் கவலை
உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கியது.
உலகின் மிகப்பெரிய கப்பல்
உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான “ராயல் கரீபியன் ஐகான் ஆஃப் சீ” (Royal caribbean's Icon of the Seas) புளோரிடாவின் மியாமி-யில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டது.
இந்த கப்பலில் மொத்தமாக 7,600 பயணிகள் மற்றும் 2,350 கப்பல் குழு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். 1,200 அடி(365 மீ) நீளம் கொண்ட ராயல் கரீபியன் பயணக் கப்பல் 20 தளங்களில் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Welcome aboard Icon of the Seas, the world's biggest cruise ship via Royal Caribbean. https://t.co/xFomWi1FJj pic.twitter.com/paio7xzwK3
— USA TODAY (@USATODAY) January 27, 2024
அத்துடன் கப்பலில் 7 நீச்சல் குளங்கள், 6 நீர் சரிவுகள், திரையரங்குகள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் உள்ளன.
ராயல் கரீபியன் பயணக் கப்பலானது 7 நாட்கள் கொண்ட தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கவலை
இந்த கப்பலானது திரவ மயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் சக்தியூட்டப்பட்ட இரட்டை எரிபொருள் எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.
மாற்றி எரிபொருளானது பசுமை வாயுக்கள் மற்றும் சல்பர் வெளியேற்றத்தை குறைப்பதாக குரூஸ் லைன்ஸ் இன்டர்நேஷனல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கப்பலில் ஆபத்தான மீத்தேன் வெளியேற்றம் அதிகரிக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Royal Caribbean's Icon of the Seas, Royal Caribbean's, Icon of the Seas, Florida, Miami, liquefied natural gas,