பல்லாயிரங்கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு!
உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல்
குறித்த இரத்தினக்கலானது 802 கிலோ எடையுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது இலங்கையில் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது.
கொருண்டம் என்பது முக்கியமான இரத்தின கல்லின் வகையில் ஒன்றாக கருதப்படுகிறது.
அந்தவகையில் கொருண்டம் வகையில் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாக தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இது இயற்கையாகவே இந்த அளவுள்ள கொருண்டம் படிகங்களின் கொத்துகள் வேறு எங்கும் பதிவாகியதில்லை.
இது உலகின் அரிதான அருங்காட்சியக இரத்தினங்களில் ஒன்று என தெரிவிக்கின்றனர்.
மேலும் இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |