உலகின் மிக நீளமான சாலை இதுதான் - 14 நாடுகள் வழியாக செல்கிறது
14 நாடுகளைக் கடந்து செல்லும் பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை, 30,000 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக நீளமான சாலையாகும்.
பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை
வட அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள அலாஸ்காவின் ப்ருதோ விரிகுடாவிலிருந்து தொடங்கி, தென் அமெரிக்காவின் தெற்கு முனையான அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் முடிகிறது. அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ உள்ள எந்த சாலையும் பான்-அமெரிக்க நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக நியமிக்கப்படவில்லை.

இது நியூவோ லாரெடோவில் உள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தொடங்குகிறது. மேலும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஒரு யூ-டர்ன் கூட கிடையாது. ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல, ஒருவர் தினமும் 500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடிந்தாலும், தோராயமாக 60 நாட்களுக்கு மேல் ஆகும்.
நோ யூ-டர்ன்
அமெரிக்காவின் 14 நாடுகள் வழியாக செல்கிறது - கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா - பல்வேறு வரலாறுகள் மற்றும் கலாச்சாரங்கள் வழியாக கடக்கிறது.

இதன் பராமரிப்புப் பொறுப்பை 14 நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இது அமெரிக்காவின் பல்வேறு நாடுகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், 1920களில் கட்டப்பட்டது.
இந்த முக்கியமான நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட 14 நாடுகளால் 1937 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நெடுஞ்சாலை 1960 ஆம் ஆண்டில் போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டது.