பணக்கார வாழ்க்கைக்கு ஏற்ற உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள்! டாப் 5 பட்டியல் இதோ
முதன்முறையாக ஆடம்பர வாழ்க்கைக்கான உலகின் மிக விலையுயர்ந்த நகரமாக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Julius Baer Group Ltd எனும் செல்வ மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆசியாவைச் சேர்ந்த நகர-மாநிலமான சிங்கப்பூர் உயர்தர வாழ்க்கைக்கு ஏற்ற உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக தரவரிசையில் (World's Most Expensive Cities For High-Class (Luxury) Living) முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2022-ல் இதே சிங்கப்பூர் இப்பட்டியலில் 5-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
veenaworld
சிங்கப்பூரைத் தொடர்ந்து ஷாங்காய் மற்றும் ஹொங்ஹொங் நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த லண்டன் நகரம் நான்காவது இடத்திற்கு சரிந்தது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு 11வது இடத்தில இருந்த நியூயார்க் நகரம் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Julius Baer's Lifestyle Index ஆனது குடியிருப்பு சொத்துக்கள், கார்கள், வணிக வகுப்பு விமானங்கள், வணிகப் பள்ளி, சுவையான சிக்னேச்சர் இரவு உணவுகள் மற்றும் பிற ஆடம்பரங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் உலகின் மிகவும் விலையுயர்ந்த 25 நகரங்களை வரிசைப்படுத்துகிறது.
இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆடம்பர வாழ்க்கைக்கு மிகவும் விலையுயர்ந்த பிராந்தியமாக ஆசியா உள்ளது.
Julius Baer's Lifestyle Index, most expensive city, luxury living, Singapore, London
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |