உலகின் மிக விலை உயர்ந்த ஹோட்டல் அறை: அடுக்கடுக்கான சிறப்பம்சங்களின் முழுப்பட்டியல்
ஒரு சொகுசு காரை விட இந்த ஒரு விடுதியில் ஒருநாள் இரவு தங்குவது என்பது விலை அதிகம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆமாம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள President Wilson ஹோட்டலின் Royal Penthouse Suite அறையில் ஒரு நாள் இரவு தங்குவது என்பது சொகுசு காரை வாங்குவதை விட விலை அதிகமாகும்.
இந்த Royal Penthouse Suite அறையில் ஒருநாள் தங்குவதற்கு $80,000 முதல் $100,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
எனவே தான் இந்த ஹோட்டல் பணக்காரர்கள் மற்றும் உலக தலைவர்கள் தலைவர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது.
அறையின் சிறப்பம்சங்கள்
President Wilson ஹோட்டலின் 8 வது தளத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ள இந்த Royal Penthouse Suite ஒரு ஹோட்டல் அறை மட்டும் அல்ல, சொல்லப்போனால் இது ஒரு அரண்மனை.
சுமார் 1,680 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த Penthouse Suite அறையில் 12 சொகுசு அறைகள் மற்றும் பிரம்மாண்டமான குளியலறைகள் உள்ளன.
உலக தலைவர்கள் இந்த அறையை தேர்ந்தெடுப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் இதன் அதிநவீன பாதுகாப்பு அம்சமான குண்டு துளைக்காத ஜன்னல்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தனிப்பட்ட மின்தூக்கி வசதிகள் ஆகியவை ஆகும்.
மேலும் இந்த அறைக்கென தனிப்பட்ட உதவியாளர்கள், சமையல்காரர்கள் மற்றும் பட்லர் என்ற தனித்துவமான ஊழியர்கள் குழு ஆகியவை 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
இந்த அறை நிறுவப்பட்டுள்ள கிராண்ட் பியானோ மற்றும் அழகிய மலை முகடுகளின் பனோரமிக் காட்சி ஆகியவை மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதாக அமைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |